உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தியால் விளையுங் கேடு

17

ஆங்கிலம் போன்றது இன்றியமையாததாகும். இவ் விரண்டையுஞ் சவ்வையாய்க் கற்பதற்கே போதிய காலமில்லை. இனி, பயனற்ற இந்தியையுங் கற்கநேரின், தமிழ்க் கல்விக்குரிய காலமும் முயற்சியுங் கவனமுங் குறையுமாதலால், தமிழறிவுங் குன்றுமென்பதற்கு ஐயமில்லை.

2. கலப்படமிகையும் சொன்மறைவும்

ஒரு நாட்டில் அல்லது வட்டாரத்தில், பெரும்பாலும் ஒரு பொருட்கு ஒரு சொல்லே வழங்கும். அச் சொற்குப் பகரமாக (பதிலாக) வேற்றுமொழிச் சொல் வழங்கின், நாட்டுமொழிச் சொல் வழக்கற்றுப் போகும். வழக்கற்ற சொல் இலக்கியத்தில் இடம் பெறின், பொருட்காட்சிச்சாலைப் பொருள்போலும் போற்றிக் காப்பு நூல்நிலையப் பொத்தகம்போலும் இறவாது காக்கப்பெறும்; அன்றேல், இறந்துபட்டு மூலமாயை நிலை யடையும். இனி னி இலக்கியமும் அழியின், பொருட்காட்சிச்சாலையும் போற்றிக்காப்பு நூல்நிலையமும் அழிந்து போவது போன்றதே.

எ-டு: வடசொல்

வழக்கற்ற

உருதுச்

வழக்கற்ற

தென்சொல்

சொல்

தென்சொல்

அமாவாசை

காருவா

கச்சேரி

மன்றம், அரங்கு

அன்னம்

எகினம்,ஓதிமம் கைதி

சிறையாளி

காவியம்

வனப்பு

மாலுமி

நீகான்,

தருமம்

அறம்

நீகாமன்-மீகாமன்

பிராயச்சித்தம்

கழுவாய்

லாகா

திணைக்களம்

மயானம்

சுடலை

சவால்

அறைகூவல்

ஒரு வட்டாரத்தில் வழக்கற்றுப்போன சொல், இன்னொரு வட்டாரத்தில் அல்லது குடியேற்ற நாட்டில் அல்லது கிளைமொழி நாட்டில் வழங்கினும் வழங்கலாம்

எ-டு:வழக்கற்ற இடம்

(சோழ கொங்கு நாடுகள்)

துப்புரவு(த.) -சுத்தம்(வ.)

முதுசொம்(த)- பிதிரார்ஜிதம் (வ.)

(தமிழகம்)

ஆ,.ஆன் (த.)- பசு (வ.) (தமிழகம்)

வழங்கும் இடம்

( பாண்டி நாடு)

துப்புரவு

முதுசொம்

(யாழ்ப்பாணம்)

ஆவு

(தெலுங்க நாடு)