உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

பண்டைக் காலத்தில் தமிழர் தனித்தமிழுணர்ச்சி மிக்கிருந்த தினால், வெளிநாடுகளிலிருந்து வந்த பொருள்கட் கெல்லாம் உடனுடன் தனித்தமிழ்ச் சொற்களை ஆக்கிக்கொண்டனர். உருளை(க் கிழங்கு), ஒட்டகம், கரும்பு, குதிரை, செந்தாழை (அன்னாசி), புகையிலை, மிளகாய், வான்கோழி என்பன அங்ஙனம் ஆக்கப்பெற்றவையே. புகைவண்டி, மிதிவண்டி. வைத்தூற்றி (funnel) என்பன பாண்டிநாட்டில் சென்ற நூற்றாண்டில் தோன்றியவை.

பிற்காலத்தில் ஆரியத்தால் தமிழுணர்ச்சி கெடுக்கப்பட்டபின், தமிழ்ச்சொல் லிருக்கவும், புதுமொழிகள் வரவர அவற்றிலுள்ள சொற்களையும் வேண்டாது வழங்கத் தலைப்பட்டுவிட்டனர்.

எ-டு:

வடசொல்

தமிழ்

சுருக்காய்

நோய்

சீக்கிரம் வியாதி

த உருது

ஆங்கிலம்

ஜல்தி

சீக்கு

ஆரியர், தமிழைக் குலைக்கவேண்டுமென்னுங் குறிக்கோள் கொண்டே, ஒவ்வொன்றாய்ப் பல சமற்கிருதச் சொற்களை வேண்டாது தமிழிற் புகுத்தியிருக்கின்றனர்.

எ-டு:

பழந்தமிழ்ச்சொற்கள்

தேவையில்லாச் சமற்

கிருதச்சொற்கள்

உவகை, களிப்பு,

கெந்தளிப்பு, மகிழ்ச்சி

ஆனந்தம், குதூகலம், சந்தோஷம்

உண்மை, மெய்,

சத்தியம், நிஜம், வாஸ்தவம்

வாய்மை

இங்ஙனம் பல வேற்றுச் சொற்களை விரவிவிட்டதனால். உலக வழக்குச் சொற்றொடர்களுட்

பலகால்

சில

தமிழொடும்

அதுவுமின்றியும் வழங்குகின்றன.

எ-டு: இந்த வருஷம் ஜாஸ்தி லீவ்

=

இந்த ஆண்டு மிகுந்த

விடுமுறை.)

இச் ச் சொற்றொடரில் ஒரு சொல் தமிழ்; ஒருசொல் சமற்கிருதம்; ஒருசொல் உருது; ஒருசொல் ஆங்கிலம்.

கிஸ்திப் பாக்கி வசூலுக்குத் தண்டோராப் போடுகிறார்கள் (=

பகுதி நிலுவைத் தண்டலுக்குப் பறைசாற்றுகிறார்கள்.)

இதில் ஒருசொல் தமிழ்; ஏனை நான்கும் உருது.