உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தியால் விளையுங் கேடு

19

ஈசுவரன் கிருபையால் சகல பந்துக்களும் செளக்கியம். இறைவன் அருளால் எல்லா உறவினரும் நலம்.)

இதில் ஐஞ்சொல்லும் சமற்கிருதம். அவற்றின் ஈறுகளே தமிழ். ஆங்கிலச் சொன்மிக்க சொற்றொடர்க்கு எடுத்துக்காட்டு வேண்டுவதில்லை. ஆங்கிலங் கற்ற இற்றை மாணவரும் பெரி யோரும் ஒரு புதிய ஆங்கில இந்திய இனமாகவே மாறிவிட்டனர். இந் நிலையில், இந்திச் சொற்களும் கலந்துவிடின், முதலில் உலக வழக்குத் தமிழும் பின்பு இலக்கிய வழக்குத் தமிழும், என்னாகும் என்பதைத் தமிழறிஞரும் அன்பரும் உய்த்துணர்ந்து கொள்க.

'நோய்', போய் 'வியாதி'வந்தது; 'வியாதி' போய்ச் ‘சீக்கு' வந்தது. இனி ‘சீக்கு’ப் போய் 'பீமாரி' வரும். இங்ஙனமே ஏனை யிந்திச் சொற்பிணியும் வரும். அதன்பின், (alright, as a matter of fact, of course, certainly not) என்னும் ஆங்கிலத் தொடர்களும் இவை போன்ற பிறவும் உரையாட்டுகளில் இடையிடுவது போன்றே, கம் ஸே கம் (ஏறத்தாழ), ஹோ ஸக்கே தோ (முடியுமாயின்), கபீ நஹீன் (ஒரு போதும் இல்லை), தர் அஸல் (உண்மையில்) என்பன போன்ற இந்தித்தொடர்களும் தாராளமாகவும் ஏராளமாகவும் தமிழர் உரையாட்டுகளில் இடையிடும். பரவாயில்லை என்பது பர்வா நஹீன் என்றே வழங்கும். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி யென்னும் தென்னிந்தியக் கலவைமொழி யகரமுதலி உண்மையில் தமிழகர முதலியாகவே மாறிவிடும். இந் நிலைமையை எதிர் பார்த்துத்தான், சென்னைப் பல்கலைக்கழகமும் சென்னைப் பேராய அரசும் என் ‘சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு' என்னும் கண்டனச் சுவடியைக் கண்ட பின்பும், அதைத் திருத்தாது விட்டன போலும்.

3. சொற்சிதைவு

6

இந்தி ஏற்கெனவே திரிந்திருந்த பிராகிருதத்தின் மும்மடிச் சிதைவாதலால், அதன் பெரும்பாற் சொற்கள் மோழையுங் கூழையுமாயுள்ளன. பிராகிருத அல்லது சமற்கிருதச் சொற்கள் பெரும்பாலும் ஈறுமட்டுங் குன்றியிருப்பின், இந்திச் சொற்கள் ஈற்றொடு ஈற்றயலுங் குன்றிநிற்கும்; முன்னவை சிதைந்திருப்பின் பின்னவை மேலுஞ் சிதைந்திருக்கும். திரிபுநிலையைப் பொறுத்த மட்டில் பிராகிருதமும் சமற்கிருதமும் ஒன்றே.