உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தியால் விளையுங் கேடு

21

விளக்கி முடிந்தவுடன் பாடம் நடத்தத் தொடங்கி, “இன்னும் எத்தனை பாட்டு நடத்தவேண்டும்?" என்று மாணவரை வினவி னேன். ஒருவன் “அஞ்ச் பாட்” என்றான். உடனே எனக்கு, இந்தி தமிழ்நாட்டிற்கும் பொதுமொழியாக வந்தால் நாளடைவில் தமிழ் இந்நிலைதான் அடையும் என்னும் உணர்வு பிறந்தது. நான் சொன்ன இந்திச் சொற்களின் கூழை வடிவம் அம் மாணவன் உள்ளத்தில் ஆழப் பதிந்ததால், அவ் வச்சிலேயே அவனையறியாது எழுந்த சொற்கள் “அஞ்ச் பாட்” என்பன. அவன் குறும்புத்தனமாகக் கூறியனவல்ல. அவன் குறும்பனுமல்லன்.

இன்று ஐந்தாம்படைபோல் தமிழ்நாட்டில் வந்துலவும் க்ராம் சேவக், சேவாதல், பாரத்சேவக் சங்க், மண்டல் காங்க்ரஸ் போன்ற இந்தி முன்னோடிச் சொற்களையும் எண்ணிப்பார்த்தேன். இந்தியைப் படிப்படியாகப் பொதுமக்கள் பேச்சாக்க வேண்டு மென்பது இந்தி வெறியர் காணும் இன்பக் கனவாதலால். தமிழர் ஏமாறுண்டு இந்தியர்க்கு அடிமையராயின், எதிர்காலத்தில் தமிழ்ச் சொற்கள் அடையும் வடிவுகள், பின்வருமாறு என் அகக்கண் ணிற்குக் காட்சியளித்தன.

எ-

-டு:

இற்றை வடிவம்

தமிழ்நாடு

எதிர்கால வடிவம்

தம்ல்நாட்

தமிழகம்

மதுரை

திருநெல்வேலி

தொல்காப்பியம்

திருக்குறள்

பத்துப்பாட்டு

சிலப்பதிகாரம்

திருவள்ளுவர்

சீத்தலைச் சாத்தனார்

இளங்கோவடிகள்

கம்பர்

தம்லக்

மத்ரா

திந்நேல்வேல்

(எகரம்இந்தியில்இல்லை)

தோல்காப் (ஒகரமும்

இந்தியில் இல்லை)

திக்குல்

பத்பாட்

சில்பத்கார்

திர்வல்வர், திர்வல், திவ்வல் சீத்தல்சாத்

இல்ங்கோவட்

கம்ப்

வையாபுரிகள் இந் நிலைமையைப் பெரிதும் வரவேற்பர். இந்திக் கலப்பால் தமிழ் இன்னோசையும் சொல்வளமும் சொற்சுருக்கமும் பெற்றதென்றும், சொற்சுருக்கம் (‘சுருங்கச் சொல்லல்') பத்து வகை அழகுள் ஒன்றென்றும், அதனால் ஒலிப்பு முயற்சி குன்றி உடல்நலம் பெருகுமென்றும், வானொலிப் பேச்சுகளில் விளம்பத் தொடங்கிவிடுவர்.