உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

வினையீறுகள்

இந்தி > தமிழ்

ஆ (எச்சம்)

இய

தமிழ்

மாறே, மாறு

இ. கா. முற்றும் எச்சமும் -ஆ வியங்கோள் - இயே

இந்தி

கே. மாறே

கரணிய விடைச்சொல்

இரு மொழியிலும் ஒருபோகான (parallel) பழமொழிக ளுள்ளும் இந்திப் பழமொழியே தமிழ்ப் பழமொழிக்கு மூலமாகக் காட்டப்படும்

இனி, இந்தி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழங்கி வருகின்ற தென்று பின்வருமாறு கோணையாராய்ச்சியும் நிகழலாம். குமரி மாநிலம் இருந்த காலத்தில். முதலில் நாவலத்தேயம் முழுவதையும் ஆண்டு வந்தவர் பாண்டியக் குடியினரே. இது,

(சிலப். 11: 19 -22)

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி என்பதனாற் பெறப்படும். பிற்காலத்தில். ஒரு பாண்டியனின் ஈரிளவலர் சோழ சேரரெனத் தோன்றி வடநாவலத்திற் கோக்கள் என்னும் துணையரையராய் ஆண்டு, பின்பு அவரோ அவர் வழியினரோ தனிவேந்தராகப் பிரிந்துபோனதாகத் தெரிகின்றது.

குமரி மாநிலமிருந்த காலத்தில், தில்லைக்கு வடக்கில் ஈராயிரங் கல் தொலைவு நிலம் இன்றிருப்பது போன்றே தெற்கிலு மிருந்திருக் கின்றது. இங்ஙனம் தில்லை முதற்காலச் சிவவுலகின் நடுவிடத்தி லிருந்ததினால் அதை நெஞ்சத் தாவாகக் கொண்டு, இறைவனின் முத்தொழில் அல்லது ஐந்தொழில் நிகழ்வை நெஞ்சத் துடிப்புப் போன்ற நடமாக உருவகித்து, நடவரசன் என்னும் பெயரால் இறைவனுருவை நடஞ்செய் வடிவில், பாண்டியனோ மூவேந்தருமோ அங்குச் சிற்றம்பலத்தில் நிறுவியிருக்கின்றனர். இச் சிறப்பால் சிற்றம்பலம் கோயில் என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறும்.

தில்லைநகர் தில்லைச்செடிகள் நிரம்பியிருந்ததால் அப் பெயர் பெற்றது. தில்லைவனம் என்பதே பண்டை வழக்கு. சிதம்பரம்