உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

அரசராற் போற்றப்பெற்றதினால், பெரும்புலவர் புலத்தியரும் அம் மொழிச்சொல்லைத் தம் பாவிலும் பனுவலிலும் வீணாக

ஆண்டனர்.

கடைக்கழகக்

காலத்துக் கூடலூர்கிழார் என்னும்

பெரும்புலவர், கிழக்குச் செல்லாது வடக்கு முன்னாது என்று அழகாகவும் தெளிவாகவும் பாடவேண்டியவிடத்து,

“பாசிச் செல்லா தூசி முன்னாது”

என்று பாடியுள்ளார்.

ப்ரதீசி - பாசி = கிழக்கு. உbC - ஊசி = வடக்கு.

(புறம்.229)

"அன்னையுந் தந்தையும் முன்னறி தெய்வம்” என்னாது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" (கொன்றை வேந்தன் 1)

என்றும்,

“உடன்பிறந்தே கொல்லும் பிணிகள்” என்னாது

..

உடன்பிறந்தே கொல்லும் வியாதி

என்றும் பாடியுள்ளார் பிற்காலத்து ஔவையார்.

(மூதுரை, 20)

ஆங்கிலராட்சிக் காலத்தில், கிறித்தவர் தம் தாய்மொழியைப் பேசாது ஆங்கிலத்தைப் பேசி வந்தது போன்றே, இந்தியாட்சிக் காலத்திலும் தமிழ்ப்பற்றில்லாதவ ரெல்லாரும் இந்தியையே பேசிவருவர்.

8. எழுத்துமொழி வரலாற்றழிவு

இந்தியாட்சி வரின், தேயவொற்றுமையின் பேராலும் செலவு முயற்சி காலக் குறைப்பின் பேராலும், தமிழ் எழுத்துப் போக்கு வரத்தும் இலக்கியமும் தேவநாகரியிலேயே எழுதப்பெறும். தமிழ்நாட்டில் தேவநாகரி புகுத்தப்பட்டுவிடின், அரையாரியமாய் மாறியுள்ள திரவிடநாடுகளில் அதைப் புகுத்துவது மிக எளிதா யிருக்கும். அதனால் தமிழ்நாட்டிற் புகுத்துவதில் மிகக் கவனஞ் செலுத்துவர். முதன்முதல் இந்தி தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டதையும் நோக்குக.

இந்தியை இந்துதேயத்தின் ஒரே தாய்மொழியாக்குவதே இந்தி வெறியர் திட்டமாதலால், நாளடைவில் தமிழ்மொழியும் அழிந்து போம்.

ஆங்கிலர் அரும்பாடுபட் டாராய்ந்து தொகுத்து அச்சிட்ட இந்திய வரலாற்று நூல்களையும் திணைக்களஞ்சியங்களையும் (Gaz- etteers), அவர் நீங்கியபின் பேராய ஆட்சியார் தம் விருப்பம் போல்