உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தியால் விளையுங் கேடு

31

திரித்தும் மாற்றியும் வெளியிட்டு வருகின்றனர். ஆரியத்தின் உயர்வும் பேராயக் கட்சியின் ‘விடுதலைப் போராட்டமும்தான் இந்தியரசு வெளியிடும் வரலாற்று நூலின் சிறந்த கூறாகவிருக்கும். இதையெழுத ஆரியரும் ஆரிய அடிவருடியரும் இந்தி வெறியருமே அமர்த்தப் பெறுவர். இந்தியத் திணைக்களஞ்சியத்தின் (Gazetteer of India) மொழிப் பகுதியில் வங்கப் பிராமணரான பர். சட்டர்சியும் கொங்குணிப் பிராமணரான பர். சு.கு. கத்திரேயும் தமிழைத் தாழ்த்தியும் தமிழிலக்கியத்தைப் பிற்படுத்தியும் எழுதியிருப்பதை யும்; திரு. பத்தவச்சலனார் தம் ஆட்சியில் தமிழ்நாட்டு வரலாற்றை நாற்பாகமாகப் பகுத்து, அவற்றுள் நாலாவதான பேராயக் கட்சியின் ‘விடுதலை’ப் போராட்டத்தையே முந்திவரைய விருந்ததையும்; வயவர் சாண் மார்சல் (Sir John Marshall) நடுநிலையாய் ஆய்ந்து வெளியிட்ட சிந்துவெளித் திராவிட நாகரிகத்தை K.N. சாத்திரி என்பார் ஆரிய நாகரிகமாகக் காட்டி வருவதையும் (New Light on the Indus Civilization - 2 Vols); எண்ணிக் காண்க.

உண்மை விளம்பியரும் தமிழ்ப்பற்றாளருமான ஆராய்ச்சி யாளர் எத்துணைச் சான்று காட்டினும், அவர் கூற்றும் எழுத்தும் தி.மு.க. ஆட்சியிலேயே கொள்ளப்படாதபோது, இந்தி ஆட்சியில் எங்ஙனம் ஏற்கப் பெறும்? கொடுங்கொள்கைத் காடுங்கொள்கைத் (Hetrodox) தமிழராலும் தமிழ்ப்பகைவராலும் கோலாலம்பூரிலும் சென்னை யிலும் நடத்தப்பட்ட கடந்த உலகத் தமிழ் மாநாடுகள் இரண்டும், மறைமலையடிகள் மறைக்கப்பட்டும் அவர் வழியினர் விலக்கப் பட்டும் தமிழ்ப் பழிப்பு மாநாடாகவே முடிந்தமை காண்க.