உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

II. இந்தியால் தமிழன் கெடும்வகை

(i) தமிழ் மாணவர்க்கு வீண் கடுஞ்சுமை

இக்காலத்திற்கு இன்றியமையாத ஆங்கில மொழியையும் அதிலுள்ள அறிவியல்களையுமே கற்கப் போதிய காலமில்லாத போது பயனற்ற ஒழுங்கில்லாத ஒரு புதுமொழியைக் கற்பது தமிழ் மாணவர்க்கு வீண் கடுஞ்சுமையே.

பிறவற்றைக் கெடுக்கும் நச்சுப்பொருள்கள் (1) விரைந்து கொல்லி, (2) மெல்லக்கொல்லி என இருவகைப்படும். ஒரு நஞ்சு விரைந்து கொல்வதைக் கண்கூட ாகக் காணலாம்; மெல்லக் கொல்வதை நாளடைவில்தான் அறியமுடியும்.

"அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்” என்னும் பழமொழிப்படி, சருக்கரையை மிகுதியாக உண்டால் புற்றுநோய் வரும் என்று ஒரு மருத்துவர் சொல்ல, ஒரு குறும்பன் தன் வாய் நிறையச் சருக்கரையை இட்டுக்கொண்டு "எங்கே புற்றுநோய் வந்து விட்டது?" என்று வினவினான். இங்ஙனமே, முதன்முதல் இந்தி புகுத்தப்பட்ட சென்னைப் பள்ளிகளுள் ஒன்றாகிய இந்து மதவியல் உயர்நிலைப்பள்ளி அதிகாரிகள், அப் பள்ளி மாணவர் சிலரை மதுரைத் தமிழ்ச்சங்க மாணவர் தேர்வெழுதித் தேறவைத்து, இந்தியால் தமிழ் கெடும் என்ற இந்தி எதிர்ப்பாளரை நோக்கி “எங்கே இந்தியால் தமிழ் கெட்டுவிட்டது?” என்று வினவினர்.

சருக்கரையை மிகுதியாக ஒருவேளை உண்டதினால் மட்டும் புற்றுநோய் வந்துவிடாது. நீண்டநாள் அங்ஙனம் உண்டுவரின் இறுதியில் அந் நோய் வரும். அங்ஙனமே இந்தியால் தமிழ் கெடுவதும் நெடுங்கால விளைவேயன்றி உடனடியான விளைவன்று. ஆதலால், உணவுத்துறையில் தேர்ந்த மருத்துவர் சொல்லை நம்புவது போன்றே, மொழிக்கல்வித்துறையிலும் சிறந்த மொழிநூலறிஞர் சொல்லை நம்பவேண்டும். இதற்காகவே காட்சி, கருத்து, ஒப்பு என்னும் மூன்றொடு உரையையும் சேர்த்து உண்மையை யறியும் அளவைகள் நான்கென வகுத்தனர் ஏரணநூலார். "மூத்தோர் சொல்லும் வார்த்தை யமுதம்” என்றதும் இதுபற்றியே.

சிற்றறிஞர் என்றும் தங்கால நன்மையை நோக்குவர்; பேரறிஞரே தங்கால நன்மையையும் வருங்கால நன்மையையும் ஒருங்கே நோக்குவர்.

மொழிகளின் இயல்பை அறியாத சிலர், ஒவ்வொரு மொழியும் ஒரு விளக்குப்போல்வ தென்றும், ஒரு விளக்கால் இன்னொரு விளக்குக் கெடாததுபோல ஒரு மொழியாலும் இன்னொரு மொழி கடாதென்றும், தமிழ் மிகப் பெரிய மொழியாதலால் எந்த