உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தியால் விளையுங் கேடு

33

மொழியும் அதை அழித்துவிட முடியாதென்றும், எத்தனையோ வேற்றரசு வந்த பின்பும் அழியாது இவ்வளவு காலம் இருந்த மொழி இனிமேலா அழியப்போகிறது என்றும், பலவாறு தம் வாய்க்கு வந்தவாறு பிதற்றி ஆராய்ச்சி யில்லாரையும் மாணவரையும் மயக்குவதுண்டு.

மொழி என்பது மக்கள் வாயில் வழங்கும் ஒலித் தொகுதியே யன்றி, அவரினும் வேறான ஓர் உயிரி அல்லது உருவம் அன்று. மக்கள் தம் தாய்மொழியைப் பேசினால் அது வாழும்; அன்றேல் மாளும். ஆகவே, ஒரு மொழிவழக்கிற்கு இன்றியமையாத சார்பு அல்லது நிலைக்களம் அதைப் பேசும் மக்கள் வாய் அல்லது நாவே. இதனாலேயே, மொழிவாயிலாய்க் கற்கப்பெறும் கலைகட்குத் தெய்வமும் நாமகள் அல்லது சொன்மகள் எனப் பெயர் பெற்றதும் என்க.

மொழிகட்கு மக்களினும் புறம்பான தனி உருவம் இருப்பின், புலி பூனையைப் பார்த்தமட்டில் வென்றுவிடுவதுபோல், தமிழும் இந்தியை எளிதாய் வென்றுவிடும். ஆயின், தமிழ் இந்திப் போராட்டம் என்பது தமிழர்க்கும் இந்தியார்க்கும் நிகழும் போராட்டமே. இந்தியார் கையில் ஆட்சியதிகாரமும் படையு மிருக்கின்றன. தமிழர்க்கு அவையில்லை. இந் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டே இந்தியார் தமிழரை மருட்டவும் வெருட்டவும் செய்கின்றனர். தமிழர் தமக்குத் தேவையில்லாததும் தமிழை நாளடைவில் வழக்கு வீழ்த்தற்கே புகுத்தப்படுவதுமான இந்தியை ஏற்றுக்கொள்ளின், ஏற்கெனவே வடமொழியால் நலிந்திருக்கும் தமிழ், மேலும் நலிந்தும் மெலிந்தும் திரிந்தும் சுரிந்தும் நாளடைவில் தென்னிந்தியாக மாறிவிடுவது திண்ணம்.

ஆரியர் இரண்டொருவராய் அல்லது விரல்விட்டெண்ணத் தக்கவராயிருந்தும், தம்மைத் தேவரென்று கூறி யேமாற்றித் தமிழரை அடக்கினர். இந்தியார்க்கு இடந்தரின், படைவலிமைகொண்டு தமிழரை அடக்குவர்.

2. தமிழர் குடிமைத் தாழ்வு

இந்தி இந்திய அரசியன் மொழியாயின், ஏனை மொழிய ரெல்லாரும் கதிரவனுந் திங்களுமுள்ள அல்லது இற்றை உலகம் நிலைக்குங் காலமெல்லாம் இரண்டாந்தரக் குடிவாணராகவே யிருப்பர். ஆளும் இனத்தானுக்கும் ஆளப்படும் இனத்தானுக்கும் இடையே ஏற்றத்தாழ்வான உளநிலை இருந்துகொண்டே யிருக்கும். தமிழ்நாட்டுத் தலைமைப் பதவிகளை யெல்லாம் இந்தியாரே தாங்குவர்.