உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

3. தமிழர் பண்பாட்டுக் கேடு

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

அலுவற்பேறும் பதவியுயர்த்தமும் பிற ஏந்துகளும் (வசதிகளும்) நோக்கி, ஆயிரத்திற்கு 999.9 பேர் இந்தியரசிற்கு அடிமையராவது தேற்றம். இதற்குத் தமிழ்நாட்டுப் பேராயத் தலைவரே தலைசிறந்த எடுத்துக்காட்டாம்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராயிருந்து இந்தியை வன்மையாய் எதிர்த்துக் கொண்டிருந்த ஒரு தமிழர் வேலூர் மகந்து உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரிய ரானவுடன் பெருமகிழ்வுடன் அதை ஏற்றுக் கொண்டது, இங்குக் கவனிக்கத் தக்கது.

இனி, தமிழ முகமதியர் சிலர் உருது கற்று அதைத் தாய்மொழி போல் வழங்கி உருது முசிலீம் குடும்பத்தோடு மணஉறவு பூண்டு தம் குடியை உயர்த்திக்கொண்டதுபோலும், தாழ்த்தப்பட்டோர் சிலர் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகத் தழுவிச் சட்டைக்காரரானது போலும், பல தமிழக்குடியார் இந்தியைத் தாய்மொழியாக ஏற்றுச் சில தலைமுறைக்குப் பின்பேனும் இந்திக்காரராக மாறினும் மாறலாம்.

இத்தகைய சூழ்நிலையில், “பணம் பந்தியிலே, குலம் குப்பையிலே”, “பசிவந்தால் பத்தும் பறந்துபோம்”, “உண்பாடின்றேல் பண்பாடில்லை” என்பனவே உண்மை மொழிகளாகும். எல்லாத் தொழிலும் ஒருசாண் வயிற்றிற்கே.

ஆரியர் உயர்ந்தோர் என்னும் தவறான கருத்தினால், தூய தமிழ னத்தார் தம்மை விசுவப்பிராமண ரென்றும், வன்னியகுலச் சத்திரிய ரென்றும் தனவைசிய ரென்றும் சற்சூத்திர ரென்றும் கூறிக்கொள்வதையும் நோக்குக.

4. தமிழ்ச் சான்றோர்க்கு வாழ்வின்மை

"அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை, பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை”. ஆகையால். பண்பாடே உருவான தமிழ்ச் சான்றோர்க்குத் தாங்கலிராமையால் வாழ்நாள் குன்றி மாய்வர். அதோடு, இந்திக்கு மாறானவ ரெல்லாரும் தேய இரண்டக ரென்றும் தீர்க்கப்பட்டுக் கடுந்தண்டனைக் குள்ளாவர்.

மறைந்துபோன தவத்திரு மறைமலையடிகளிடம் ஓர் அரசியல் தூதர் சென்று, "நீங்கள் கட்டாய இந்தியை ஏற்றுக் கொண்டால் ஆயிரம் உருபாச் சம்பளமுள்ள பேராசிரியப் பதவி கிடைக்கும் என்றார். அதற்கு அடிகள் “பத்தாயிரம் உருபாச் சம்பள மாயினும் கட்டாய இந்தியை ஏலேன்” என்று கடுத்து விடையிறுத்துவிட்டார்கள்.