உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தியால் விளையுங் கேடு

35

தவத்திரு மறைமலையடிகளைப் பொதுமக்களும் போற்ற ல்லை; பொருள்மக்களும் போற்றவில்லை; அரசியலும் போற்ற வில்லை; (ஆரியப்) பல்கலைக்கழகங்களும் போற்றவில்லை. அதனால் நூறாண்டு வாழ வேண்டிய அடிகள் 75ஆம் அகவையில் மறைந்தார்கள்.

5. தமிழின மறைவு

இந்திய

தமிழின்றேல் தமிழனில்லை. ஆதலால் தமிழ் அழியின் தமிழ் என்னும் இனமும் நாளடைவில் மறைந்துபோம். ரெல்லாரும் இந்தியாராகவே யிருப்பர்.

தமிழ்நாட்டுக் கல்லூரிகளிற் பெரும்பான்மையிடங்கள் இந்தி மாணவர்க்கே அளிக்கப்பெறும். அதனால் அலுவல்களிற் பெரும் பான்மையும் அவர்க்கே போம்.