உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. முதற் போராட்டம்

IV. இந்திப் போராட்டம்

பேராயக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் 1937ஆம் ஆண்டு ஆச்சாரியாராற் சென்னை மண்டலத்தில் இந்தி புகுத்தப் பட்டது. தனித்தமிழைப் புதுப்பித்த தமிழ்த்தலைவரான தவத்திரு மறைமலையடிகள் "இந்தி பொதுமொழியா?” என்னும் இந்தி யெதிர்ப்பு நூலை வெளியிட்டார்கள். 'சுயமரியாதை' என்னும் தன்மானக் கட்சித் தலைவரான பெரியார் இந்தியை வன்மையாய் எதிர்த்தார். இந்தியெதிர்ப்புக் கூட்டங்கள், ஊர்வலங்கள்,மாநாடுகள், மறியல்கள், துண்டு வெளியீடுகள், சுவரொட்டிகள், செய்தித்தாள் திருமுகங்கள், இதழிகைக் கட்டுரைகள், சுவடிகள், பாடல்கள், பல்லிலக்கக் கையெழுத்துப் பட்டியல் விடுப்புகள், குறிப்புப் படங்கள், சின்னக்குறி யணிவுகள், இந்திப்பலகைக் கரிநெய்ப் பூச்சுகள், இந்தியரக்கி யெரிப்புகள்ஆகிய பல்வேறு செயல்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து தமிழ்நாடெங்கணும் நடைபெற்றன. சென்னைவரை இருநூறு இந்தி யெதிர்ப்புத் தொண்டர்படைக் கால்நடைச் செலவும் நிகழ்ந்தது. அதன் தொடர்பாகச் சென்னைக் கடற்கரையிற் கூட்டிய மாபெருங் கூட்டத்தில், தவத்திரு மறைமலையடிகள் நள்ளிரவுவரை இந்தித் திணிப்பை வன்மையாய்க் கண்டித்துப் பேசினர்.

திருச்சிராப்பள்ளியினின்று

இந்தியெதிர்ப்பாற் பெரியாரும் புலவர் உட்பட ஆயிரக்கணக் கான தொண்டரும் சிறைசென்றனர்.

அற்றைத் தலைமைத் தமிழ்ப்பேராசிரியரான நாவலர் சோம சுந்தர பாரதியார், கா. சுப்பிரமணியப் பிள்ளை முதலியோர் தன்னலப் பிண்டங்களும் தமிழ்ப்பகைவருமான இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் போலாது, இந்தியெதிர்ப்புப் போர்க்களத்தி லிறங்கி அரிமாக்கள்போல் உறழினர் (கர்ச்சித்தனர்). ஈழத்துச் சிவானந்த அடிகள், சண்முகானந்த அடிகள் முதலிய துறவியரும் இந்தி யெதிர்ப்புப் போராட்டத்தில் ஆழ்ந்து ஈடுபட்டனர்.

ஆயினும், பேராயக் கட்சி பெரும்பான்மையா யிருந்த தினாலும், போராட்டத் தொடர்ச்சிக்கு வேண்டும் பொரு