உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திப் போராட்டம்

37

ளின்மையாலும். வெளிப்படையான இந்தியெதிர்ப்பு நாளடைவில் நின்றுவிட்டது. தூய தமிழர் தூய தமிழர் உள்ளத்தில்மட்டும் உணர்ச்சி கொதித்துக் கொண்டிருந்தது. மறைமலையடிகளைப் பின்பற்றாமை

தமிழ்நாடு மறைமலையடிகளைப் பின்பற்றித் தனித்தமிழைப் போற்றாமையும், இந்தியெதிர்ப்புப் போராட்டத் தோல்விக்கு ஒரு கரணியமாம். தன்மானக் கட்சித் தலைவர் மட்டுமன்றித் தமிழ்ப் பேராசிரியரும் வடசொற்பெயரையே தாங்கிநின்றனர்; தமிழ்ப் பகைவரால் தொகுக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியும் 1936ஆம் ஆண்டு வெளிவந்துவிட்டது. அதில் ஆயிரக் கணக்கான தென்சொற்கள் இடம்பெறவில்லை; அடிப்படையும் முதன்மையுமான தென்சொற்களெல்லாம் வட சொற் றிரிபாகக் காட்டப்பட்டுள: ஆயிரக்கணக்கான வேண்டா அயற்சொற்கள் இடம்பெற்றுள. அவற்றுள் இந்திச் சொற்களும் உள்ளன. அவற்றுள் இரண்டு டர் (அச்சம்), லக்கடி (விறகு) என்பன. அவ் வகரமுதலி முழுவதையும் பார்த்த அயலார், தமிழ் வடமொழியின் கிளை என்ற முடிபிற்குத்தான் வரமுடியும். ஏற்கெனவே, சமற்கிருதம் இந்திய மொழிகட்கெல்லாம் தாயென்று தவறாக எண்ணிக்கொண்டிருந்த வடவர், இந்திச் சொற்களையும் சென்னைத் தமிழகரமுதலியிற் கண்டபின், இந்தியெதிர்ப்பு பிராமணர்க்கு மாறான நயன்மைக் கட்சித் தூண்டுதலின் விளைவே யென்று கருதிவிட்டனர். அதனால், இந்திவெறியரின் இறுமாப்பு இறுகி முறுகிவிட்டது. 1949-ல், இந்தியே இந்தியப் பொதுமொழி யென்று நெறியிட்ட இந்திய அரசியலமைப்பு வெளிவரலாயிற்று.

பல்லாண்டிற்குப்பின், இந்தியப் பொதுமொழி ஆங்கில மாகவே யிருக்கவேண்டு மென்று திரு.(C).இராசகோபாலச்சாரியார் கிளர்ச்சி செய்தார். அதன் பயனாக நேரு உறுதிமொழி பிறந்தது. அது அவர்க்குப்பின் வந்த தலைமை மந்திரியான இலால்பகதூர் சாத்திரியாராலும் வலியுறுத்தப் பெற்றது. ஆயின், நேரு காலத்தி லேயே அது சட்டமாக்கப் பெறாமையாலும், அது தம் சொந்தக் கருத்தென்று கூறி அவரே பின்வாங்கிவிட்டமையாலும், அவர் காலத்திலேயே அதன் வலிமை சற்றுக் குன்றிவிட்டது.

நேரு உறுதிமொழி தமிழ்நாட்டிற்குப் பயன்படாமை

நேரு உறுதிமொழி கேரளம், மைசூர் (கருநாடகம்), ஆந்திரம் என்னும் திரவிட நாடுகட்குப் பயன்படுமேயன்றித் தமிழ்நாட்டிற்குப் பயன்படாது.

கால்டுவெலார் அயல்நாட்டினராதலாலும், முதன்முதலாகத் தமிழையும் அதன் இனமொழிகளையும் ஆய்ந்தமையாலும்,