உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

பல்வேறு சூழ்ச்சிகளின் விளைவாக ஏற்பட்டதாகவே குடிமதிப்புக் கணக்குகள் காட்டுகின்றன; அறிக்கைகளுங் கூறுகின்றன.

கட்சித் தலைவர் கல்வித்துறையில் தலையிடுகை

ஆங்கிலராட்சி நீங்கியபின் இந்தியஆட்சியில் ஏற்பட்டுள்ள பெருங்கேடு, கட்சிக்கொள்கை கல்விக்களத்துள் வலிந்து புகுவதே. ஒவ்வொரு துறையும் அததற்குரிய அதிகாரியின் ஆட்சியில் இருத்தல் வேண்டும். மற்றத் துறைகள் அவற்றில் தேர்ச்சி பெற்றவர் ஆட்சியில் இருத்தல் போன்றே, கல்வித் துறையும் கல்லூரி முதல்வர், கல்வித் துறை இயக்குநர், பல்கலைக்கழகத் துணைக் கண்காணகர், மொழிநூற் புலவர் முதலிய கல்வித் திறவோர் ஆட்சியிலேயே இருத்தல் வேண்டும். ஆயின், இதற்கொரு விலக்குண்டு. சில சமையங்களில் ஆளுங்கட்சியினர் தம் கட்சிச் சார்பானவரையே இயக்குநராகவும் துணைக் கண்காண கராகவும் அமர்த்துவதுண்டு. அங்ஙனம் அமர்த்தப்பட்டோர் நடுநிலை திறம்பிய தந்நலக் காரராதலின் கல்வித்திறவோ ராகார்.

தேர்ச்சியும் பட்டறிவும் நடுநிலைமையும் வாய்ந்த இந்தியக் கல்வித்திறவோர் இந்தியக் கல்விக்குத் தாய்மொழியும் ஆங்கிலமுஞ் சேர்ந்த இருமொழித் திட்டமே ஏற்றதென்று ஒருமனமாய் முடிபு செய்துள்ளனர். ஆயின், பேராயக்கட்சிப் பணிக்குழுவினரோ, தந்நலமும் தம் கட்சி நலமுமேபற்றி, மும்மொழிக் கல்வித் திட்டத்தையே இந்தியா முழுமைக்கும் வகுத்துள்ளனர். அவர் கல்வித்திறவோ ரன்மையாலும் பயனில்மொழியொன்றைச் சேர்த்திருப்பதாலும், அத் திட்டம் கடைப்பிடிக்கத் தக்கதன்று. இந்தியாவிற் கல்வித் துறையே திறந்த மடமாகவும், ஆசிரியரே ஊருக்கிளைத்த பிள்ளையார்கோயி லாண்டியராகவும் உள்ளனர்.

வடஇந்தியர்க்கு எங்ஙனம் தென்னிந்திய மொழி பயன் படாதோ, அங்ஙனமே தென்னிந்தியர்க்கும் இந்திமொழி பயன்படாது.தென்னிந்தியாவில் இந்தியைப் புகுத்தல் வேண்டி, வட இந்திய மாணவரை ஒரு தென்னிந்திய மொழி கற்கச் சொல் கின்றனர். இதற்கு முப்பெருந் தடைகள் ஏற்பட்டுள்ளன.

(1)

இந்திநாட்டு மாணவர்க்கு, சிறப்பாக உத்தரப் பைதிரத்தி லுள்ளவர்க்கு, தென்னிந்திய மொழி கற்க விருப்பமில்லை. (2) உத்தரப் பைதிரத்தில் மட்டும் பள்ளியிறுதி மாணவர் இருபதிலக்கவர் உள்ளனர். நூற்றிற்கொருவராயினும், இருபதிலக் கம் மாணவர்க்கும் தென்னிந்திய மொழி கற்பிக்கும் ஆசிரியர் இருபதினாயிரவர் வேண்டும்.