உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

(3)

63

உத்தரப் பைதிரத்தில் மொழியாசிரியர் மாதச் சம்பளம் 150 உருபா. இச் சம்பளத்திற்கு இந்தி வாயிலாய்த் தென் ச் னிந்திய மொழி கற்பிக்கும் ஆசிரியர் வருவது அருமை. இம் முத்தடைகளையுங் கடப்பினும், இந்திநாட்டு மாணவர் ஒரு தென்னிந்திய மொழியிற் செயலாற்றறிவு பெற முடியுமா என்பது அறிஞர் பலர்க்கும் ஐயுறவாயிருக்கின்றது.

இந் நிலைமையில் இந்தியைத் தென்னாட்டில் திணிப்பதில் மட்டும் இந்திநாட்டார் கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர். உத்தரப் பைதிரத்திற்கு இருமொழிக் கல்வி போதுமென்றும்., மும்மொழிக் கல்வி அந் நாட்டு மாணவர்க்குக் கடுஞ்சுமை என்றும், தென் னாட்டார் இந்தி கற்பின் இந்திநாட்டாரும் ஆங்கிலங் கற்ப ரென்றும், இந்தியை ஆட்சிமொழி அல்லது இணைப்புமொழி யாக்கிவிடின் தென்னாட்டார் இந்தியைத் தப்பாது கற்பரென்றும், இந்திநாட்டில் மும்மொழித் திட்டம் புகுத்தப்படினும் அது நடைமுறையில் இருமொழித் திட்டமாகவே யிருக்குமென்றும், தென்னிந்திய மொழிக் கல்விக்குச் செலவிடும் பணம் வீண் தண்டமென்றும், இந்திநாட்டுப் பல்வேறு கட்சியினருங் கூறி வருகின்றனர்.

இதனால், உத்தரப் பைதிரத்தார் இருமொழித் திட்டத்தையே ஏற்கின்றனர் என்பது தெளிவு. ஆயினும், நடுவணரசியலார் தம் பதவியைக் காத்துக்கொள்வதற்கு இந்திநாட்டார் துணை இன்றி யமையாததென்று கண்டு, அவர் பேராயத்தினின்று விலகா திருக்கு மாறு அவர் விருப்பம்போல் நடக்கத் தீர்மானித்துள்ளனர். இதினின்று, அவர் தென்னாட்டாரை எத்துணைத் தெம்மாடிக ளென்று கருதியுள்ளனரென்பது தெரிகின்றது. இதற்குக் காமராசர் களும் நிசலிங்கப்பாக்களும் பிரமானந்த ரெட்டிகளுமே கரணிய மாவர். ஆயினும், சேரன் செங்குட்டுவன் போன்ற செந்தமிழ் நாட்டு மாணவ மழவர், கூற்றுவனையும் எதிர்க்கும் ஆற்றலராய் இந்தி யெதிர்ப்புப் போர்க்கு அணிவகுத்து நிற்பதை, கனகவிசயர் வழியினரான இந்தி வெறியர் கண்டு திருந்துவாராக.

பேராயச் செருக்கழிவு

ஆங்கிலேயன் இந்தியாவை அடிமைப்படுத்தினான் என்றும், அவனை நாங்கள் விரட்டிவிட்டோமென்றும், அதனால் நாங்களே என்றும் இந்தியாவை ஆளத் தகுதியுடையோம் என்றும், நாங்களே விடுதலை வாங்கித் தந்ததினால் எங்கள் விருப்பப்படியே எல்லாரும் இந்தியை இந்தியப் பொதுமொழியாக ஏற்கவேண்டுமென்றும், துவரை பேராயத்தார் தருக்கிவந்த செருக்கு வரலாற்றுண்மையால் அடியோடொழிந்தது.