உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

ஆங்கிலேயனே இற்றை யிந்தியாவை அமைத்தவன் என்பதும், அவன் இந்தியாவிற்கு மீட்பனாகவன்றி அடிமைப்படுத்தியாக வரவில்லையென்றும், இந்தியத் தேசியப் பேராயத்தை (Indian National Congress) அவனே தோற்றுவித்து இந்தியரைத் தன்னாட்சிக்குப் பயிற்றித் தானே விடுதலையுந் தந்தானென்பதும், இந்திய வரலாறும் இங்கிலாந்து வரலாறும் எவரும் மறுக்கொணாவாறு பறை யறைந்து சாற்றும் பேருண்மைகளாம்.

தமிழனின் பரந்த நோக்கு

எல்லாரும் ஓரினம் என்பதும் எல்லாரும் வாழவேண்டும் என்பதுமே, தமிழன் தொன்றுதொட்டுக் கடைப்பிடித்துவரும் நெறி முறைகளாகும். இப் பரந்த நோக்கிற்கும் பண்பாட்டியல்பிற்கும் ஏற்பவே, தமிழ் இந்தியப் பொதுமொழியாக வேண்டுமென்று கூறாது, இந்தியரெல்லார்க்கும் பொதுவாக ஆங்கிலமே ஆட்சி மொழியாக வேண்டுமென்று இம்மியும் நடுநிலை தவறாது கூறுகின்றான். இந் நடுநிலையையும் பெருந்தன்மையையும் மொழிவெறியென்று தன்னலக்காரர் கண்டிப்பது, அவரது காட்டிக் கொடுக்கும் தன்மையை எத்துணைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றது! தம் நோக்கம் நிறைவேறாவிடின் அதற்குத் தடையா யிருப்பவரைப் பழிப்பது தன்னலக்காரர் இயல்பே.

விட்டுக்கொடுப்பு

தென்னாட்டுப் பேராயத் தலைவர், சிறப்பாகத் தமிழ்நாட்டுத் தலைவர், மொழித்துறையில் தென்னாட்டார் விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும், வடநாட்டார் ஆங்கிலங் கற்றால் தென் னாட்டார் இந்தி கற்கவேண்டும்மென்றும், இந்தியைத் தென் னாட்டார்மீது சுமத்துவது போன்றதே வடநாட்டு இந்தியார்மீது ஆங்கிலஞ் சுமத்துவது என்றும், ஒருசிறிதும் உத்திக் கொவ்வாத வாறு பேசி வருகின்றனர்.

க்காலத்தில் தென்னாட்டார்க்குப் போன்றே வடநாட்டார்க் கும் ஆங்கிலம் இன்றியமையாததாகும். இதை வடநாட்டார் அறியாமல் இல்லை. ஆயினும், தென்னாட்டாரைத் தெம்மாடிக ளென்று கருதிக்கொண்டு தாம் ஆங்கிலங் கற்க விரும்பாததுபோல் நடிக்கின்றனர். இந்தியைத் தென்னாட்டார் வாயில் திணிக்கும்வரை இந் நடிப்பு இருந்துகொண்டே யிருக்கும். ஆங்கிலராட்சி தொடங் கியதிலிருந்தே வடநாட்டாரும் தென்னாட்டாரும் ஆங்கிலங் கற்று வந்திருக்கின்றனர். ஆதலால் இது வடவர்க்குப் புதிதன்று.

வடநாட்டில் மாணவர், பொதுமக்கள், அரசியலார் ஆகிய முத்திறத்தாரும் மொழித்துறையில் ஒரே கருத்தினர். தென்னாட்டுத்