உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

65

தலைவர்தாம் மாணவரையும் பொதுமக்களையுங் காட்டிக் கொடுத்து எங்ஙனமும் தம் பதவியைக் காத்துக்கொள்ள விரும்பு கின்றனர்.

இந்தியார் நாள்தோறும் கரும்பு தின்னமட்டுமன்றிச் சோறு அல்லது உணவுண்ணவுங் கைக்கூலி கேட்கின்றனர். இதற்குத் தென்னாட்டார் அடிமை மனப்பான்மையே கரணியம். அமைச் சருட்பட ஆங்கிலங் கற்ற இந்தியார் பலர், இந்தி யறியாரொடும் இந்தியிலேயே பேச விரும்புவதைக் கண்டாகிலும், தென்னாட்டுத் தலைவர் பேதைமை தெளியவேண்டும்.

தமிழர் ஏற்கெனவே அளவிற்கு மிஞ்சி விட்டுக்கொடுத் துள்ளனர். சமற்கிருதம் இலக்கிய மொழியாதலால், இந்திய வழக்கு மொழிகளுள் எல்லாவகையிலும் தலைசிறந்தது தமிழே. ஆயினும் தமிழே இந்திய ஒருதனி ஆட்சிமொழியாக வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்க முழு உரிமையிருந்தும், அதைக் கேளாது விட்டுக்கொடுத்துள்ளனர். எதிலும் விட்டுக் கொடுக்க ஓர் அளவுண்டு. ஒருவர் வரையாதீயும் வள்ளலாயினும் தம் உறுப்பிலும் உடமையிலும் ஓரளவுதான் விட்டுக் காடுக்கலாம். ஆயின் உயிரை (அதாவது உடல் முழுவதையும்) விட்டுக்கொடுத்தல் அரிது. இங்ஙனஞ் செய்பவர் உலக முழுவதிலும் ஒருசிலரே. ஒரு நாட்டு மக்களெல்லாம் தம் மானத்தையும் காலத்தையும் முயற்சி வலிமையையுங் ஓய்வையும் வீணாக விட்டுக்கொடுப்பதெனின், அது உலக வாழ்க்கைக்கு ஒவ்வாததாம்.

வடவர் ஒன்றையும் விட்டுக்கொடுக்கவில்லை. தமிழரை மட்டும் விட்டுக்கொடுக்கச் சொல்வது அடிமைத்தனமும் காட்டிக்

கொடுப்புமேயாகும்.

பிறர்க்கே அறிவுரை கூறும் பேராயம்

“அக்காளைப் பழித்துத் தங்கை அலவை போனாள்”, “தன் குற்றந் தனக்குத் தோன்றாது” என்பன பழமொழிகள்.

இந்தியப் பேராயக் கட்சியைச் சேர்ந்த நடுவணாட்சியார், தென்வியத்துநாமில் அமெரிக்க ஒன்றிய நாடுகள் துணை புரிந்து வரும் போர்ச் செயலையும், மேலையாசியாவில் இசரவேலர் அரபியரை எதிர்த்துப் புரிந்துவரும் தற்காப்புப் போர் வினைகளையும், தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்க ஒன்றியமும் உரொடீசியா வும் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கட்குச் செய்துவரும் அளவிறந்த கொடுமைகளையும், சமையம் வாய்க்கும் போதெல்லாம் கண்டனஞ் செய்து வருவது தக்கதே.

ஆயின், இந்தியாவிற்குள்ளேயே, உடன்பிறந்தாரொப்பவரும் தென்னாட்டுப் பழங்குடி மக்களும் இந்தியாரினும் நாகரிகப்