உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

பண்பாட்டிற் சிறந்தவரும் உலகமுதல் உயர்தனிச் செம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவரும் ஆகிய தமிழரை, அடிமையர்போற் கருதி, இந்தியை ஏற்காவிடின் படைவிடுத்தடக்கு வோமென்று பட்டிமருட்டும் பெட்டை மருட்டும் மருட்டுவது எத்துணை இழிசெயலாகும்!

இந்தியப்படை தம் கையிலுள்ளதென்று இந்தியார் செருக்கித் தருக்கின், இதே மனப்பான்மைகொண்ட தென்னாப்பிரிக்க வெள்ளையரின் நடவடிக்கையில் எங்ஙனங் குற்றங்காண முடியும்? அறிவாற்றலில் தாழ்ந்த இந்தியர்க்கே இத்துணைச் செருக்கிருப்பின், அவற்றில் மிகவுயர்ந்த வெள்ளையர்க்கு எத்துணையிருக்கும்!

பிறர்க்கு அறங்கூறுவது எவருக்கும் எளிது; ஆயின் அவ்வழி தாமே ஒழுகுவது அரிது. செயலொடு பொருந்தாச் சொல் பொருளற்றது. ஆதலால், இனிமேலாயினும் இந்தியார் தம் மடமையையும் கடமையையும் உணர்ந்து, தமிழரொடு உறவு கொள்ளும் வகையில் தக்கவாறு திருந்துவாராக.

இந்திப்படத் தடுப்பு

1937-ல் இந்தி கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டில் இந்தியெதிர்ப்பு இருந்துகொண்டுதான் வருகின்றது. ஆயின், மும்முறைதான் அது எரிமலைக் கொதிப்புப்போற் கிளர்ந் தெழுந்தது. அவற்றுள் 3ஆம் முறையான இவ் வாட்டை நிகழ்ச்சியே முழுவெற்றியையும் முடிந்தமுடிபான நிலைமையையும் விளைத்தது.

திரைப்படம் பொதுமக்கட்குரிய இன்புறுத்த வகைகளுள் தலைசிறந்ததுதான். ஆயின், இந்தித் திரைப்பட அமைப்பகங்கள், தென்னிந்திய இந்தி பரப்பற் கழகம் (தக்ஷண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா) போல், தமிழர்க்கு வேண்டாததும் தமிழுக்குக் கேடு பயப்பது மான இந்தியைப் பரப்பி வருவதாலும் இதைத் துணை யாகக் கொண்டு இந்திவெறியர் இந்தியைத் தமிழ்நாட்டில் திணிப் பதனாலும், எத்துணைப் பேரறிஞர் எத்துணை ஏரண முறையில் எதிர்த்துக் கூறினும் இந்திவெறியர் இம்மியும் செவிசாய்க்காமை யானும், இந்தியை இந்திய அரசியல் மொழியாக்குவதற்குத் துணையாக விருக்கும் எல்லா வழிகளிலும்இந்தியை அறவே தடுப்பதென, எதிர்காலக் குடிவாணரும் இந்தியால் மீளா அடிமைப் பட்டுக் கெடவிருப்பவருமான இற்றை மாணவர் முடிபுகொண் னர். உண்மையான தமிழ்ப் பெரும்புலவர் கருத்தும் இதுவே. இதுவரையில்லாத இந்திப்படத் தடுப்பு இன்று ஏற்பட்டதற்கு இந்தித் திணிப்பே கரணியம்.

இதை உணராது, திரைப்படம் மொழி நிலவரம்பு கடந்த தென்றும், இந்திப்படம் நின்றுவிடின் ஆயிரக்கணக்கானவர்