உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

67

வேலையிழந்து அரசிற்கும் வருவாய் குன்றுமென்றும், மாணவரை அடக்கியொடுக்க வேண்டுமென்றும், பலரும் பலவாறு நாள் தொறும் செய்தித்தாள்களில் எழுதி வருகின்றனர். அவர் யாரென்று ஆய்ந்து பார்ப்பின், இந்திச் சார்பானவராகவோ தமிழ்ப்

பண்பாட்டை வேண்டாதவராகவோதான் இருப்பர்.

தமிழர் அல்லது தமிழ்நாட்டு மாணவர் இந்தியைத்தான் வறு க்கின்றனரேயன்றித் திரைப்படத்தையன்று. அவ் விந்தியும் தன் எல்லைக்குள் தன்மட்டில் இருந்தால், அதை வெறார். "நண்டு கொழுத்தால் வளைக்குள் இராது” என்பதுபோல், தன் எல்லை கடந்து பிற இந்திய மொழிகளை யெல்லாம் தன்னடிப்படுத்தக் கருதுவதனாலேயே அதை எதிர்க்கின்றனர். அதுவும் தம் நாட்டிற்குள்ளேயேயன்றி இந்திநாட்டில் அல்லது இந்திச் சார்பான நாட்டிலன்று என்பதை அறிதல் வேண்டும். இதனால், இந்தியாரின் இந்தித் திணிப்பு, தாக்கல் வினையென்பதும் தமிழரின் இந்தி யெதிர்ப்பு தற்காப்பு வினையே என்பதும் தெளிவாம்.

திரைப்படத்திற்கும் இந்திக்கும் இரண்டறக் கலந்த பிணைப் பில்லை. திரைப்படம் எம்மொழியிலும் இருக்கலாம். தமிழர் வேறெம்மொழிப் படத்தையும் தடுக்கவில்லை. இந்திப்படம் இந்தியா முழுதும் செல்லுமெனின், ஆங்கிலப் படம் உலகமுழுதும் செல்லும். ஆதலால், திரைப்பட முதலாளியர் தமிழிலும் திரவிட மொழி களிலும் படம்பிடிக்க விரும்பாவிடினும், சிறந்த நடிகரைக்கொண்டு ஆங்கிலப் படம் பிடித்து உலகமுழுதும் பரப்பிப் பெரும்புகழ் பெறுவதுடன் பெரும்பொருளும் ஈட்டலாமே! மதுரைத் தியாகராசர் கல்லூரி நிறுவனர் கல்வித் தந்தையார் திருமான் கருமுத்துத் தியகராசச் செட்டியார் "நான் உடம்போடுள்ளவரை என் கல்லூரிக்குள் இந்தி புகக் கூடாது” என்று சூளுறவு கொண்டிருப்பது எத்துணைப் பாராட்டிற் குரிய தமிழ்ப் பண்பாடாகும்! அவரைப் போன்றே தூய தமிழரான திருமான் மெய்யப்பச் செட்டியாரும் ஏன் அவரைப் பின்பற்றக் கூடாது? பொருளீட்ட எத்தனையோ வழிகளுள. தமிழும் தமிழ்ப் பண்பாடும் கெடாவாறு பொருளீட்டுவதே தமிழ்ச் செல்வர்க்குத் தக்கதாம்.

ஒரு நாட்டிற் பெரிய மாறுதல் நிகழும்போது ஒருசார் தொழிலார் வேலையிழக்கத்தான் நேரும். அவர் ஒத்த பிற தொழிலையோ வேற்றுத் தொழிலையோதான் மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகரில் மின்வண்டி நீக்கப்பட்டபின், அவ் வண்டியோட்டுநரெல்லாரும் இயங்கியோட்டுநராகிவிட்டனர். இந்தி நீக்கப்பட்டபின் இந்தியாசிரியரெல்லாரும் பிற பாட ஆசிரியராகத்தான் வேண்டும். அதுபோல், இந்திப்படத் தொழி