உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

69

இந்திப் படங்களையே போற்றவேண்டுமென்பது எங்ஙனம் பெற படும்?

மாணவரை அடக்கி யொடுக்க வேண்டுமென்பவர்.,மாணவர் பாகுபாட்டையும் இக்கால உலகியலையும் அறியாதவரேயாவர். குழந்தை வகுப்பு முதல் பட்டப்பின்னையாராய்ச்சி வகுப்புவரை மாணவர் பல்வேறு திறப்பட்டுள்ளனர். அறிவியற்கல்லூரி தொழிற் கல்லூரி ஆராய்ச்சிக் கல்லூரி இறுதியாட்டை மாணவர் பலர், அமைச்சர் சிலரினும் அறிவாற்றல் பட்டறிவு மிக்கவரே. பல்கலைக் கழக மாணவர் கிளர்ச்சி பார் முழுதும் பரவியுள்ளது. இந்திய நாடாளுமன்றங்களிலும் நடுவணாட்சி மன்றமாகிய பாராளு மன்றத்திலும் அடிக்கடி நிகழும் வாய்வரிசையும் கைகலப்பும், மாணவர் ஒழுங்கின்மையை முற்றும் மறைக்குமளவு மதுக்கடைச் சண்டைகளிலும் கேடாகவுள்ளன. இத்தகைய சூழ்நிலையிலும் சுற்றுச் சார்பிலும், அறிவுப் பேற்றிற்குத் துணைசெய்யாது அடிமைத்தனத்திற்கே உள்ளாக்கும் இந்திக் கல்வியையும் அதன் பரவலையும் தடுக்கும் உரிமையுணர்ச்சிமிக்க மாணவரை அடக்குவது, எங்ஙனம் முறையாகும்?.

இந்தியா முழுமைக்கும் ஆங்கிலமே ஆட்சிமொழியும் பொது மொழியும் இணைப்பு மொழியும் என்று அரசியலமைப்புத் திருத்தப் பெற்றுவிடின், மாணவர் இந்தி யெதிர்ப்பில் ஈடுபடார். எத்தனை இந்திப்படங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பெறினும் காட்டப் பெறினும், எள்ளளவும் தடையிராது. இதற்கேற்ற முயற்சியையே இனி இந்திப்படச் சார்பாளர் மேற்கொள்வாராக. தமிழ்நாட்டு மாணவர் பிறமொழியை எதிர்ப்பவருமல்லர்; வடநாட்டின் பகைவருமல்லர். அடிமைப்படுத்தும் மொழியாய் வருவதினாலேயே இந்தியை அவர் எதிர்க்கின்றனர்.

சிவசேனையின் சீர்கெட்ட செயல்

இந்திப் படங்களைத் தமிழ்நாட்டரங்கிற் காட்டவிடாமை யால், தமிழ்ப் படங்களையும் தமிழ்நாட்டில் உருவான இந்திப் படங்களையும் எங்கள் நாட்டிற் காட்டவிடோம் என்று, மராட்டிய நாட்டுச் சிவசேனை கூறுகின்றது. இதன் புரைமையைப் பின்வரும் ஏதுக்களால் அறியலாம்.

(1) மராட்டிய நாடு இந்தி நாடன்று.

(2) தமிழ்நாட்டு மாணவர் இந்திப்

மராட்டியப் படத்தைத் தடுக்கவில்லை.

படத்தையேயன்றி

(3) நமிழ்நாட்டு இந்தியெதிர்ப்பு மொழிபற்றியதேயன்றி நாடு பற்றியதன்று.