உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

(4) மராட்டியர் இந்திச் சார்பா யிருப்பின், தமிழ்நாட்டில் உருவான இந்திப் படங்களையும் ஏன்தடுக்க வேண்டும்? தமிழர் மராட்டிய மக்களையும் அவர் மொழியையும் வெறுக்காது நட்புநிலையி லிருக்கும்போது, மராட்டியச் சிவசேனை தமிழ்ப் படங்களைத் தடுப்பதும் தமிழ்நாட்டை வெறுப்பதும் தமிழர் பகையை வீணாக வலியத் தேடிக் கொள்வதேயாகும்.

சிவசேனை எங்ஙனம் மராட்டிய நாட்டைச் சீர்திருத்த முயல் கின்றதோ, அங்ஙனமே தமிழ்நாட்டு மாணவரும் தம் நாட்டைச் சீர்திருத்த முயல்கின்றனர். அம் முயற்சியின் ஒரு கூறே இந்தியெதிர்ப்பு. மராட்டிய நாட்டில் தமிழர் இருப்பது போன்றே தமிழ் நாட்டிலும் மராட்டியர் இருப்பதால், இருவகுப்பாரும் ஒற்றுமைப் பட்டு நட்புநிலையி லிருப்பதே இரு சாரார்க்கும் நன்மை பயக்கும். இதனைத் தமிழ்நாட்டு மராட்டியப் பெரியோர் சிவசேனைக்கு

எடுத்துரைப்பாராக.

தமிழ்நாடு ஒருபோதும் இந்தியை இந்தியத் தனியாட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளாது. இதற்குத் தமிழின் சிறப்புத் தன்மையே கரணியம். இதைச் சிவசேனை உணர்தல் வேண்டும்.

திரு. இலக்குமிநாராயணார் 'மெயில்' பதிப்பாசிரியர்க்கு விடுத்த திருமுகம்

இந்திப் படங்கள்

CC

'ஐய,

சன்னை இந்திப்படப் பிடிப்பாளரும் அவர் கூட்டாளியரும், சென்னை நாட்டு இந்தியெதிர்ப்புக் கிளர்ச்சியும் இந்திப் படக்காட்சி நிறுத்தமும்பற்றி அண்மையில் வெளியிட்ட முறையீடு, மாணவரின் இந்திப் படக்காட்சி யெதிர்ப்புக் கிளர்ச்சியைப் பிறழ வுணர்ந்ததால் எழுந்ததாகும். நாடு முழுதும் தன் இந்தியெதிர்ப்பைச் சாற்றியிருக்கும் போதும், இந்தியிலெழுதப்பட் பெயர்ப் பலகைகள் நீக்கப்படும் போதும், இந்திப் படங்களை இந் நாட்டிற் காட்டுவது பொருளற்றதாகும்.

எசு.எம்.சோசியும்

'மேலும், திரு எசு.எம். சோசியும் திரு. சவானும், பிறரும் போன்ற தலைவர், இந்தியெதிர்ப்புக் கிளர்ச்சி இந் நாட்டு மக்களுள் ஒரு சிறு பகுதியினரால்தான் நடத்தப்பட்டு வருகின்றதென்றும். இந்திப் படங்கள் இங்கு மக்களாற் பெரிதும் விரும்பப்படுகின்றன, வென்றும் கூறி, அதனால் இந் நாட்டுப் பெரும்பான் மக்கள் இந்திக்கு மாறாக இல்லையென்று கருதுமாறு செய்து வருகின்றனர்.

“சிவசேனைக் கிளர்ச்சி தென்னாட்டு இந்திப்படவெதிர்ப்புக் கிளர்ச்சிக்கு விடையன்று. தென்னாட்டில் இவ் வேளையில் இந்தியில் வெளிவரும் எதுவும் அம் மொழியின் திணிப்பாகக்