உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

வேண்டும் அறிவுப்பேறும் மொழிவாயிலாகவே இயலும். இக்கால உயர்கல்வி மேலையர் கண்ட அறிவியல்களா யிருப்பதாலும், உலக மக்களின் கூட்டுறவு வரவர நெருங்கி வருவதாலும், தமிழ்போன்ற பண்டையிலக்கிய முதுமொழியார்க்கும் ஆங்கிலம் போன்ற அறிவியன் மொழிக்கல்வி இன்றியமையாததாகின்றது. தமிழர்க்கே இங்ஙனமெனின், பண்டை யிலக்கியமுமற்ற புன்சிறு புதுமொழி யாகிய இந்தி பேசுவார்க்கு மேலைமொழிக் கல்வியின் இன்றியமை யாமையை எடுத்துரைக்க வேண்டுவதில்லை.

ஒரு நாட்டிற் பல அரசியற் கட்சிகளிருப்பினும், அவற்றிற்கு ஆட்சிவகை அல்லது முறைபற்றிக் கருத்து வேறுபாடிருக்க லாமேயன்றி, தாய்மொழி வளர்ச்சிபற்றியும் கல்வித் துறையிலும் அவ் வேறுபாடிருத்தல் கூடாது. இங்கிலாந்தில், பழமை போற்றியர், தாராளிகர், உழைப்பாளியர் என மூவரசியற்கட்சி யிருப்பினும், ஆங்கில மொழிபற்றியோ இலக்கியம்பற்றியோ எள்ளளவும் கருத்துவேறுபாடு கொள்ளாமையை எண்ணிக் காண்க.

இந்தியாவில், தாய்மொழியிலோ மேலை மொழியிலோ இரண்டிலுமோ மேற்கல்வி யில்லாத பலர் கட்சித் தலைவராகத் தலையெடுத்துள்ளனர். இதற்கு நூற்றிற்கெண்பதின்மர் தற்குறிகளா யிருப்பதும் குலப்பிரிவினையுமே கரணியம். எழுதப் படிக்கத் தெரிந்ததனால் மட்டும் ஒருவர் கற்றோர் அல்லது அறிஞர் ஆகிவிடார்.

66

‘ஆற்றவுங் கற்றார் அறிவுடையார்” என்றார் முன்றுறையரை யனார் (பழமொழி.). ஆற்ற = மிக.

தமிழில் மேற்கல்வியொடு பற்றுமில்லாத தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர், முற்றும் தந்நலம்பற்றியே, இந்திப் புறக்கணிப் பால் இந்திய வொற்றுமை கெடுமென்றும் வேலைவாய்ப்புக் குன்றுமென்றுங் கூறி, இளமாணவரைக் கெடுத்து வருகின்றனர். அவரும் தாய்மொழிப் பற்றில்லாப் பெற்றோரைப் பின்பற்றியோ, காண்டதுவிடாத கட்சிவெறியாலோ, தமிழ்ப் பற்றின்மையாலோ, வரலாறறியாமையாலோ, பதவியாசையாலோ, வேலைகிடைக்கு மென்னும் நம்பிக்கையாலோ, ஆரியச் சார்பாலோ அதை நம்பிக் கெடுகின்றனர்.

தமிழ்நாட்டு இந்தி விலக்கால் இந்திய வொற்றுமை கெடப் போவதில்லை. ஆங்கிலம் ஆட்சிமொழியாயின், ஆங்கிலங் கற்றார்க்கு இந்தியாவில் மட்டுமன்றி உலகமெங்கும் வேலை கிடைக்கும்.

தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர் இந்தியை ஏற்காவிடின் தம் பதவியை இழப்பர். இனி, எதிர்க்கட்சியிற் சேர்வதும் அவர்க்கு