உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

73

இழிவாகத் தோன்றும். இதனாலேயே பட்டறிவில்லா இளமாண வரைத் தேசிய மாணவர் எனப் பிரித்து, அடுத்த பொதுத்தேர்தலில் தம் வெற்றிக்குழைக்குமாறு, நாடு முழுதுந் தழுவிய ஒரு கழகத்தை யமைத்து மாவட்டந்தொறும் கிளைநிறுவி வருகின்றனர்.

பகுத்தறிவுள்ள தமிழ் மாணவர், தமிழ் எல்லாத் தமிழர்க்கும் பொதுவென்றும், ஆங்கில அறிவின்றி எதிர்காலத்திற் சிறப்பாக வாழ்தல் இயலாதென்றும், அறிதல் வேண்டும்.

...பசுவின்வால் பற்றி

நதிகடத்த லன்றியே நாயின்வால் பற்றி நதிகடத்த லுண்டோ நவில்'

(நீதிவெண்பா, 11)

தமிழ்ப்பற்றில்லாத மாணவரும், எதிர்காலத் தம் வாழ்வையும் தந்நாட்டு முன்னேற்றத்தையும் நோக்கியேனும் இந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தை மேற்கொள்ளல் வேண்டும்.

தமிழ் திராவிடர் முன்னேற்றக் கழக மொழியென்றும், அக் கழக மொழிக் கொள்கைக்கு முற்றும் முரணானதையே பேராயத்தார் கடைப்பிடித்தல் வேண்டுமென்றும், வேண்டுமென்றும், இருநச்சுக் இருநச்சுக் கருத்துகள், பேதையருள்ளத்திலும் பேராயக்கட்சி வெறியருள்ளத்திலும் பதிக்கப்பட்டுள்ளன. ஆங்கில ஆட்சியாற் சென்னைநாடு என்று பெயர் பெற்றிருந்த தமிழ்நாட்டை மீண்டும் தமிழ்நாடென வழங்கச் செய்ததன்றி, வேறொன்றும் தி.மு.க. அரசு தமிழுக்குச் செய்துவிட வில்லை. ஆயினும், அதைக்கூடப் பேராயம் செய்ய விரும்பவில்லை யென்பது கவனிக்கதக்கது. சீர்திருத்தத் திருமணத்தைச் சட்டப்படி செல்ல வைத்ததும் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத்தை நிறைவேற்றியதும் தி. மு. க. ஆட்சியில் ஏற்பட்ட சிறந்த நன்மைகளே.

தி. மு. க. ஆட்சியிற் பொதுவாகத் தமிழர்க்கோ சிறப்பாக மாணவர்க்கோ ஏதேனும் தீங்கு நேர்ந்திருப்பின், மாணவரெல்லாரும் ஒன்றுசேர்ந்து ஒரு கட்சியையமைத்து அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதல்லது, நாட்டிற்கும் தமக்கும் கேட்டையும் தீரா அடிமைத்தனத்தையும் வருவித்துக் கொள்வது கல்லூரி மாணவர்க்கு அழகாகுமா? தம் பருவத்திற்கும் கல்வி நிலைக்கும் தக்கவாறு பகுத்தறிவைப் பயன்படுத்தி உயர்திணைக் கேற்ப ஒழுகுதல் வேண்டும்.

ஆதலால், பாட்டிமார் சொல்லும் பகுத்தறிவிற்கொவ்வாத கதைகளைக் கேட்டின்புறும் சிறுவர் சிறுமிகளைப்போல், பேராயத் தலைவர் கூறும் இக்காலத்திற் கேற்காத தற்கொலைக் கொள்கை களை மாணவர் செவிக்கொள்ளாது, வள்ளுவரும் மறைமலை யடிகளும் காட்டியவழிச் சென்று உயர்வாராக.

ஒருவன் இன்றைக்குச் சாகினும் நாளைச் சாகினும் ஏறத்தாழ ஒன்றே. அதுபோல் இந்தி முந்திவரினும் பிந்திவரினும் ஒன்றே.