உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

இந்தியப் பொதுமொழிபற்றி மறைமலையடிகள் கருத்து ஆங்கிலமே பொதுமொழியாதற் குரித்து

CC

75

இங்ஙனம் இவ் விந்திய தேயத்தில் மட்டுமேயன்றி இவ்வுலகம் எங்கணும், அழுந்திப் பயிலவும் பேசவும் வழங்கவும் பட்டுவரும் ஆங்கிலமொழி யொன்றே, உலக முழுமைக்கும் பொதுமொழியாகப் பரவி வருதலால், அது தன்னையே நம் இந்துமக்கள் அனைவரும் பொதுமொழியாய்க் கைக்கொண்டு பயிலுதலும் வழங்குதலுமே அவர்கட்கு எல்லா வகையான நலங்களையுந் தருவனவாகும். முதலில் உலகியல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் கடைக் கூட்டுதற்கு எத்தொழிலைச் செய்வதாயிருந்தாலும், அத் தொழில் நுட்பங்களை நன்கறிந்து செய்தற் குதவி செய்யும் பல்லாயிரக் கணக்கான தொழிலறிவு நூல்கள் ஆங்கில மொழியிலன்றி வேறெதி லேனும் இருக்கின்றனவா? பல்வகைக் கைத்தொழில் களைப் ப் புரியுங்கால், அவற்றிற்கு வேண்டும் பல்வகைப் பண்டங் களைப் பல நாடுகளிலிருந்து வருவித்தற்கும், அவற்றால் தாஞ் செய்து முடித்த பண்டங்களைப் பல நாடுகளிலும் உய்த்து விலை செய்து ஊதியம் பெறுதற்கும் ஆங்கில மொழியேயன்றி வேறேதுந் துணை செய்யுமோ? செய்யாதே. இன்னும் உலகமெங்கணும் நடைபெறும் வாணிகமெல்லாம் ஆங்கில மொழியின் உதவி கொண்டே நன்கு நடைபெறுதலை அறிந்துவைத்தும், அதனைப் பொதுமொழியாக வழங்காமல், விரிந்த வாணிக வாழ்க்கைக்கு ஒரு சிறிதும் பயன்படாத இந்தியைப் பொதுமொழியாக்க முயல்வோர் நம்மனோர்க்கு உண்மையில் உதவி செய்பவர் ஆவரோ? கூர்ந்து பார்மின்காள்!

இனி அரசியற்றுறையில் நம் இந்து மக்களை முன்னேற்றி வருவதும், தம்முரிமைகளைக் கேட்க இவர்கட்குக் கண்திறப்பித்த தும், இவ் விந்திய நாடெங்கணும் பெரும் பொருட்செலவாற் பலகோடி மக்களாற் பயிலப்பட்டு இயற்கைப் பொதுமொழியாய்ப் பரவிவருவதும், இலக்கண இலக்கியத் துறைகளிலும் நடுநிலை குன்றா உண்மைகாண் வகைகளிலும் பன்னூறாயிரக் கணக்கான நூல்கள் புதிய புதியவாய்ப் பெருகும் அறிவுப் பெருஞ்செல்வம் வளரப்பெறுவதுமான ஆங்கிலமொழியை, எல்லா மொழிகளிலும் உள்ள எல்லாச் சிறந்த நூல்களையுந் தன்கண் மொழிபெயர்த்து வைத்து அவற்றின் பொருளை அவை வேண்டுவார்க்கு எளிதின் ஊட்டுந் தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த ஆங்கில மொழியை, நம்மனோர்க்குப் பொதுமொழி யாக்காமல், இந் நலங்களில் ஒரு கடுகளவுதானும் இல்லா இந்திமொழியைப் பொதுமொழியாக்க முயலல் அறிவுடையார் செயலாகுமா? ஆகாதே. ஆதலால், நந்தமிழ் நாட்டவர் ஆங்கிலத்தையுந் தமிழையுமே நன்கு பயின்று நலம் பயின்று நலம்பெறுவாராக!”

-

இந்தி பொதுமொழியா? பக். 24, 25.