உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




VI.

முடிபு

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ஆரிய அடிமைத்தனம் ருந்துவருவதனாலும், கி. பி. 15 ஆம் நூற்றாண்டிற்குமேல் தமிழ் வேந்தராட்சி நீங்கி வெவ்வேறு வேற்றரசு ஏற்பட்டமையாலும், இலக்கியத் துறையிற் கோடன்மாரும் வையாபுரிகளும் தோன்றிய மையாலும், தமிழருட் பெரும்பாலார் பகுத்தறிவு, தன்மானம், நெஞ்சுரம், போர்மறம், ஒற்றுமை, தமிழ்ப்பற்று ஆகிய பண்புகளை அல்லது பண்பாட்டுக் குணங்களை அறவே யிழந்துவிட்டனர். அதனால், ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு வெளிநாடுகளிலிருந்து வந்த முகமதியர் வழியினர் ஆங்கிலராட்சி நீங்கியபின் தனிநாடுபெற்றும். தமிழ் தோன்றிய காலத்திலிருந்து தென்னாட்டிலிருந்துவரும் தமிழர் நாம் பிறந்த நாட்டையும் பெறமுடியாது போயிற்று

தமிழகத்திற் சேர சோழ பாண்டிய மூவேந்தராட்சி நீங்கியதற் கும் அவர்க்குள் ஒற்றுமையின்மையே கரணியம். மூவேந்தரும் ஒற்றுமையா யிருந்தவரை அசோகப் பேரரசனும் தமிழகத்துட் கால்வைக்க முடியவில்லை.

இந்தியாவில் தனிநாடு பெறக்கூடிய தகுதியும் உரிமையும் தமிழருக்கே சிறப்பாக உள்ளனவேனும்,"யாதும் ஊரே; யாவருங் கேளிர்” என்றும், “ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்” என்றும் உயரிய கொள்கையையுடைய உரவோர் வழிவந்தவ ராதலின், மொழிநில மத இனம்பற்றிய பல்வேறு நாடாட்சி தந்நலமும் பகையுமே வளர்த்தலால், நாட்டுப்பற்று அல்லது தேசப்பற்று என்னும் குறுகிய நோக்கின்றி, மன்பதை முழுதும் அன்பும் அமைதியுங்கொண்டு, இன்புற்று வாழ, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளும் பொது நாயகத்தை நிறுவும் பரந்த நோக் குடைமையால், இந்தி இந்தியப் பொதுமொழியாவதை அடியோடு தமிழர் வெறுக்கின்றனர்.

இந்தியா பன்மொழி யின மதங்கொண்ட பன்னாட்டு உட்கண்ட மாதலால், ஒற்றுமையே (Unity) யன்றி ஒருமை (Oneness), ஒருமைப்பாடு (Integration), ஓரியன்மை (Uniformity)என்பவற்றைப் பெறமுடியாது.