உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிபு

77

தமிழர் இந்திய ஒற்றுமையை விரும்புகின்றனர். அதற்குப் போக்குவரத்து, தற்காப்பு, காசடிப்பு, வெளிநாட்டுறவு ஆகிய நாற்றுறை நடுவணரசிடம் இருந்தாற் போதும். கல்வி நாட்டரசிற் குரிய பொருட்டுறையாதலால், அதிற் கூட்டரசு தலையிடக் கூடாது. இந்திய ஒற்றுமை இந்தியைச் சார்ந்ததன்று.

ஓ ரியன்மை யென்பதைத் தலைக்கீடாகக்கொண்டு, இந்தியைத் தமிழ்நாட்டில் திணிப்பின், தமிழ்நாட்டுப் பிரிவினைக்கு இந்தி வெறியரே அடிகோல்பவராவர். மொழித்துறையில் ரியன்மை காண முயல்வது பல்வேறு நிறமாயுள்ள இந்தியர் உடம்பில் ம்பில் ஒரே சாயத்தைப் பூசுவதொத்ததே.

இற்றை மாணவரே எதிர்காலக் குடிவாணரும் அமைச்சரு மாதலால், மாவட்டவாரியாகப் பிரிந்து நில்லாது நாடு முழுதும் ஒரே அமைப்பாகக் கூடி, நிலையாக நின்று செயற்பட வேண்டும். மாணவர் தலைவரா யிருக்கும் கல்லூரி யிறுதியாண்டு மாணவர் ஆண்டுதோறும் வேனில் விடுமுறையிற் கூடி, ஒரு போலியமைச் சரங்கு (Shadow Cabinet) போல், தத்தம் கல்வித் துறையொடு தொடர்புள்ள நாட்டுச் செய்திகளையும் ஆட்சி முறையையும்பற்றிப் பேசலாம். நாடாட்சி நன்முறையில் நடப்பின் ஒத்துழைக்கலாம்; தீயமுறையில் நடப்பின் திருத்தலாம். அஃதியலாக்கால் பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற வழிவகுக்கலாம்.

மாணவர் எத்தகை யெதிர்ப்பையும் கிளர்ச்சியையும் சட்ட முறைப்படியே அமைதியாகவும் வன்செயலின்றியும் நிகழ்த்துதல் வேண்டும். போக்குவரத்துத் தடையும் பொருட்சேதமும் விளைப்பின், பொதுமக்கள் வெறுப்பைத் தேடிக்கொள்வதொடு புகைவண்டிக் கட்டண வுயர்விற்கும் புதுவரிகட்குமே வழிவகுப்பவ ராவர். இனி, அரசியல் தண்டனைக்கும் ஆளாவர்.

ஆளுங்கட்சியாயினும் ஆளாக்கட்சியாயினும் அரசியற் கட்சித் தலைவர் மாணவரைக் கட்சிச் சார்பாக்குவது நன்றன்று. அது, அவரது அகக்கரண வளர்ச்சியைப் பெரிதும் தடுக்கின்றது. கல்லூரி விட்டு நீங்கி ஏதேனும் ஒரு வேலை மேற்கொண்டு வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பே, அவரவர் கருத்துப்படி ஏதேனுமொரு கட்சியைத் தழுவ இடந்தர வேண்டும்.

இன்று தேசிய மாணவர் என்றும், திராவிட முன்னேற்றக் கழக மாணவர் என்றும், மாணவ நிலையிலேயே ருவேறு கட்சி ஏற்பட்டுள்ளன. இந் நிலைமையில், நகராட்சியிலும் ஊராட்சியிலும் கட்சிச் சார்பு காட்டல் கூடாதென்று, ஒவ்வொரு கட்சித் தலைவரும் கூறுவதில் என்ன பொருளிருக்கின்றது? உள்ளாட்சித் துறையிலும் வேட்பாளர் வெளிப்படையாகக் கட்சிச் சார்பாகவே போட்டியிடும்