உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

போது, அவ் வாட்சிமன்ற நடவடிக்கைகளில் உறுப்பினர் எங்ஙனம் நடுநிலையாயிருக்க முடியும்? இங்ஙனம் இளமை முதல் முதுமை வரை கட்சிமனப்பான்மை தொடரவிடின், இங்கிலாந்திற்போல் தகுதிபற்றி ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பண்பாடு எந்த வூழியில் அமையும்?

6

ஆளுங்கட்சியிற் சேர்ந்தால் எளிதாய் அலுவல் கிடைக்கும் என்னும் நம்பிக்கையே, ஒரு மாணவரின் நடுவுநிலையை நீக்கி விடுகின்றது. ஆளுங்கட்சி அவருக்குத் தரும் வேலையும் ஒரு கையூட்டுப் போலாகின்றது. இதனால் நடுநிலை மாணவர் இடர்ப் பட நேர்கின்றது. ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் பண்பாடேயன்றி உண்பாடன்று.

சென்னைச் சட்டப் பேரவை யிருமொழித் திட்டத் தீர் மானத்தை நடுவணரசு இன்னும் ஒப்புக்கொள்ளாமையால், பகுத்தறிவும் தன்மானமும் தமிழ்நாட்டு முன்னேற்றத்தில் நன்னோக்கமும் கொண்ட மாணவர், சிறப்பாகச் சூழ்ச்சியவினைக் கல்லூரி மாணவர், வருகின்ற வேனில் விடுமுறையில், அவரவர் வட்டகை யூர்தொறுஞ் சென்று, இந்தியால் விளையுந் தீங்கைப் பொதுமக்கட்கு எடுத்துச் சொல்வாராக. 'குடிசெயல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்”

(குறள். 1023)

தாய்மொழியாகிய தமிழும் உலகப் பொது அறிவியல் மொழி யாகிய ஆங்கிலமுஞ் சேர்ந்த இருமொழித் திட்டமே தமிழ் நாட்டிற்கு இனி யெக்காலுந் தக்கதாம். இங்ஙனமே பிற பைதிரங்கட்கும் தாய் மொழியும் ஆங்கிலமுமாகிய இருமொழித் திட்டமே ஏற்றதாம். இந்தியா முழுமைக்கும் ஆங்கிலம் ஒன்றே ஆட்சியும் கல்வியும் இணைப்பும்பற்றிய பொதுமொழியா யிருப்பது தலைசிறந்த திட்டமாகும்.