உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

1. இந்தியால் முருகன் ஆரியத் தெய்வமாகுங் கேடு

தமிழ், இடை டையிட்டிடையிட்டுப் பகுதி பகுதியாய் இந்திய வாரியில் மூழ்கிப் போன குமரிக்கண்டத்தின் தென்கோடியில், இற்றைக்கு 50,000 ஆண்டுகட்கு முன்பே தானாகத் தோன்றிவளர்ந்த உலக முதல் உயர்தனிச் செம்மொழி யென்பதும், தமிழ்நாடே உலகில் முதன்முதல் தோன்றிய பல்துறை நாகரிகப் பண்பாட்டு நாடென்ப தும், எவரும் உண்மையில் மறுக்கொணாத செய்திகளாம்.

பாண்டியர் முத்தமிழையும் வளர்த்த பண்டை முத்தமிழ்க் கழகங்களுள், முதலது கி.மு. 10,000 ஆண்டுகட்குமுன் தோன்றிய தாகும். அன்று ஆரியம் என்னும் பேரும் எவர் உள்ளத்திலுங் கருக்கொண்டதில்லை.

தமிழர் முறையே நாகரிகமடைந்த குறிஞ்சிநிலை, முல்லை நிலை, மருதநிலை என்னும் முத்திணை நிலைகளுள் முதலதான குறிஞ்சிநிலையி லிருந்தபோதே, அவர் தொழுத முதல் திணைநிலைத் தெய்வம் முருகனே. முருகன் என்னும் பெயரின் முதற்பொருள் இளைஞன் என்பதே. அதன் வழிப்பொருள்கள் அழகன், மறவன் என்பனவாகும். அழகும் மறமும் இளமையிலேயே மிகுந்திருக்கும். முள் முளை. ள. முளைதல் (முளைத்தல்) முளைவிடுதல்.

முளை

=

தோன்றுதல்,

1. விதைமுளை. "வித்திய வெண்முளை” (ஐங். 29) 2. இளமை. “முளையமை திங்கள்” (கம்பரா. கும்ப. 16) 3 மரக்கன்று. "அதன்றாள் வழியே முளையோங்குபு

ee

முளையான் = குழந்தை, சிறுவன்.

முள் - முரு முருகு -

1.

இளமை (திவா.)

=

(சீவக. 223)