உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் எப்படிக் கெட்டான்?

91

பார்ப்பதால் சில சமையங்களில் உண்மையான பொருத்தங்களே தப்பிப்போவது முண்டு. பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்குமுள்ள மனப்பொருத்தமே உண்மை யான மணப்பொருத்தமாகும்.

நாட்பார்க்கிறவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் பார்ப்பதுமில்லை, பார்க்கவும் முடியாது. ஒருவன் நோய்ப்பட்டிருக்கும் போதாவது, வீடுபற்றி வேகும் போதாவது, நாளும் வேளையும் பார்த்து மருந்துண்ணவாவது நெருப்பணைக்கவாவது முடியுமா?

“நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை” என்றார் ஔவையார். மேலும் புகைவண்டியிற் பயணஞ் செய்வோர் இராகுகாலம் குளிகைகாலம் பார்க்க முடியுமா? முடியாதே!

வடார்க்காட்டைச் சேர்ந்த ஆம்பூரில், பல ஆண்டுகளுக்கு முன் ஒருவர் 40ஆம் அகவை (வயது)யில் சிலநாள், நோய்ப்பட்டிருந்து இறந்துபோனார். அவருடைய பிறப்பியலில் (சாதகத்தில்) 60 அகவையென்று குறித்திருந்ததால், சரியாய் மருத்துவம் பார்க்கவில்லை என்று அவர் இறந்தபின், பிறப்பியற் குறிப்பை எடுத்துக் கூறி அவருடைய வீட்டார் வருந்தினர். ஒருவனுக்குச் சாவு வரும் நாளும் வேளையும் இறைவன் தவிர வேறு ஒருவரும் அறியார். பிறப்பியல் கணிக்கிற கணியர்க்குத் தமது இறப்பு நாளே தெரியாதிருக்க, பிறர் இறப்பு நாள் எங்ஙனம் தெரியும்? ஒவ்வொருவர்க்கும் இறப்பு நாள் முன்னமே தெரிந் திருந்தால் அதற்குள் எத்தனையோ காரியங்கள் செய்துகொள்ளலாமே!

சிலர் பிறப்பியற் கணிப்பு உண்மையானதென்றும், அதைக் கணிக்கிறவர் சரியாய்க் கணியாமையாலேயே தவறு நேர்கிறதென்றும் சொல்கின்றனர். அப்படியானால் உண்மையாய்க் கணிக்கிறவர் யார்? எந்தத் திறவோரை (நிபுணரை)க் கேட்டாலும், தமது கணிப்பு ஐந்துக்கிரண்டு பழுதில்லாம லிருக்கு மென்றே கூறுகின்றனர். இனி, அந்த ஐந்துக்கிரண்டுதான் எவையென்று திட்ட மாய்த் தெரியுமா (?) அதுவுமில்லை. அங்ஙனமாயின், பிறப்பியலால் என்னதான் பயன்? உண்மையாய்க் கணிப்பவர் இனிமேல் தோன்றுவாராயின் அப்போது பார்த்துக்கொள்ளலாம். அதுவரை பிறப்பியலில் நம்பிக்கை வையாதிருப்போம்.

பிறப்பியலானது, ஒருவன் பிறந்த வேளையில் நாளும் (நட்சத்திரமும்) கோளும் (கிரகமும்) நிற்கும் நிலையை அடிப்படையாக வைத்துக் கணிக்கப் படுவது. ஒவ்வொருவன் பிறப்பையும் நாட்கோள் நிலை தாக்கும் என்று கொள்வது பொருந்தாது. அரசர் காரியத்தில் அது உண்மையாயிருக்கலாம். ஒரு புகைவண்டி புறப்பட்டபின் பொதுமக்களுக்கு நிறுத்தப்படாவிடினும், ஒரு பெரிய அதிகாரிக்கு நிறுத்தப்படுகின்றது. அதுபோல, கடவுளாட்சியில், ஓர் அரசின் காரியத்தில் அல்லது ஒரு நாட்டுக் காரியத்தில், நாட்கோள்நிலை மாறலாம் முதன் முதலிற் கணித்தவர்கள் அரசர்க்கே பிறப்பியல் கணித்து, பிற்காலக் கணியர் பிழைப்புக் குன்றியபோது முறையே சிற்றரசர்க்கும், கிழார் (ஜமீன்தார்) கட்கும், செல்வர்க்கும் அவருடைய இனத்தார்க்குமாகக் கடைசியிற் பொதுமக்களிடம்