உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

தமிழர் திருமணம்

கிறிஸ்தவர், மகமதியர் முதலிய பிற மதத்தாரை இக்கால இந்துக்கள் இழிவாயெண்ணுவதால், குலப்பிரிவினை மதத்தையும் தாக்கி, இந்துக் கோயில்களிலுள்ள கல்வெட்டுகளைப் பிற மதத்தார் கண்டாராய்வதற்

கிடமில்லை.

சிலவூர்களில் 'வித்துவசபை' யென்றும் புலவர் கழகம் என்றும் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் தமிழர் செல்வம் கொடை வழங்கப் படுகின்றது. அங்குக் கிறிஸ்துவ மகமதியப் புலவர்க்கு இடமில்லை. நோபெல் பரிசுபோலத் தேசகுலமத வேறுபாடின்றி, புலமைத் தகுதியறிந்து பரிசளிக்கப் பட்டாலொழியத் தமிழும் தமிழரும் முன்னேறுவதில்லை யென்பது திண்ணம்.

பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டில் மதப் பொறுதி (Religious tolerance) இருந்தது. தமிழ்க்கழங்களில் சைவர், மாலியர் (வைணவர்), பௌத்தர், சமணர், உலகாயதர் ஆகிய பல மதத்தினரும் இருந்தனர். தமிழரசர் பல மதக் கோயில் கட்கும் அறநிலையங்கட்கும் மானியம் அளித்தனர்; பல மத ஆசிரியரையும் பட்டிமண்டப மேற்றித் தருக்கம் செய்வித்து உண்மைகண்டு வந்தனர். ஒரு குடும்பத்திற்குள்ளேயே, சேரன் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் போல், பல மதத்தினர் இருக்க இடமிருந்தது.

இவ்வகை மதப் பொறுதியுள்ள வரையில் தமிழ்நாடு அமைதியாகவும் சீராகவு மிருந்துவந்தது. பிற்காலத்தில், ஒரு தன்னலக் கூட்டத்தார். பிற மதங்களால் தமது தலைமை கெடுதல் நோக்கி குலமதப் போர்களைக் கிளப்பிவிட்டனர். தமிழ்நாடு அலைக்கழிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பொருளைப்பற்றியும் மனிதனுக்குக் கருத்து வேறுபாடுண்டு. மதமோ மிகுதியும் கருத்து வேறுபாட்டிற் கிடமானது. ஆகையால், கருத்துரிமை யுள்ள நாட்டில் மதப் பொறுதியு மிருத்தல் வேண்டும்.

(2) கல்வியிழப்பு

பார்ப்பனர் தம்மை ஞாலத்தேவர் (பூசுரர்) என்றும், வடமொழியைத் தேவமொழி யென்றும் உயர்த்திக்கொண்டதால், தமிழர் அவரைப் பின்பற்றி வட சொற்களை வேண்டாது வழங்கப் பல தென்சொற்கள் அறவே மறைந்துபோயின. புதுக் கருத்துகட்கெல்லாம் தமிழில் புதிதாய்ச் சொற்கள் புனையாமல், வட மொழியிற் புதிதாய்ப் புனையப்பட்ட சொற்களையே வழங்கியதால், தமிழிற் சொல்வளர்ச்சியில்லாதும் போயிற்று.

கடவுள் வழிபாட்டையும் இல்லறச் சடங்குகளையும் வடமொழியில் நடத்துவித்ததால், தமிழின் மதிப்புக் குன்றிற்று. கல்வெட்டுகளைக்கூடப் பிற்காலத்தில் வழக்கற்ற வடமொழியில் பொறிக்கத் தொடங்கினர்.

தமிழர்க்கு உயர்தரக் கல்வியில்லாதும், தப்பித்தவறிக் கற்றவர்க்கும் பிழைப்பில்லாதும் போனதால், பல புலவர் வழிமுறைகள் அற்றுப்போயின. கடல் கோட்பட்டவைபோக, எஞ்சிய நூல்கள் பல செல்லுக்கிரையாகியும், அடுப்பில் இடப்பட்டும், பானெட்டாம் பெருக்கில் எறியப்பட்டும், எறியப்பட்டும்,

குப்பையிற்