உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இசைத்தமிழ்க் கலம்பகம்

4

பிறமொழிப்பேர் கொண்டாரின் பெயர்பெறின் தமிழ்குன்ற இறுதிவரை யிடங்கள் ஏந்தியே நிற்குமன்றோ

5

அச்சமோ நாண்மடமோ அடிமைபுன் னம்பிக்கையோ

(தமிழிலே)

எச்சமாறன் பின்மையோ எழில்தமிழ்ப்பேர் தாங்காமை (தமிழிலே)

6

சமயமொழி பேர்என்னச் சாரவொன் றில்லை

அமையும் இறைவன் ஒன்றே அனைத்துல கெல்லை (தமிழிலே)

79. தாய்மொழிப் பற்று

'ராம பசன கோரிய' என்ற மெட்டு

ப.

தாய்மொழிப் பற்றெங்ஙன் போகும் - தமிழன் ஆகம்

உ.1

சேய்நிலையி லிருந்து சிறந்த தாய்மொழி கொண்டு சீருடன் வாழ நேருமே சிறியோருமே

2

பெற்றதா யிருக்கவும் பிறத்தியைத் தாயென்பதோ பெற்றதாய் மொழியும் அதே உன்னுவீர் இதே

3

தமிழ்ஒன்றே உலகினில் தனிநிலைச் செம்மொழியாம் தள்ளுதற் கெதுங் குறையே அதில் மொழியே

4

(தாய்)

(தாய்)

(தாய்)

மென்மொழி இன்பமாக மிழற்றும் தமிழமுதே மெலிந்தநோய் முதுநிலையும் மேவும் எளிதே

(தாய்)

5

அறிவு வளர்வதற்கே அடிப்படைதாய் மொழியே அதையேனும் உணர்ந்தறி வாய்அன்பு வழியே

(தாய்)