உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இசைத்தமிழ்க் கலம்பகம்

81. தனித்தமிழிற் பேசாத தமிழாசிரியனின்

தகுதியின்மை

பண் - (கானடா)

தாளம் - முன்னை

1

தமிழாசிரிய னென்று தானே அமர்ந்துகொண்டு

தமிழிற் பேசாதவன் தமிழாசிரியனோ

தமிழா சிறியவனே.

2

தமிழ்ப்புல வோனென்று தான்பெயர் தாங்கிக்கொண்டு தமிழிற் பேசாதவன் தமிழ்ப் புலவோனோ

3

தமிழைப் புலந்தவனே.

தமிழில்வல் லானென்று தான்றனைச் சொல்லிக்கொண்டு தமிழ்ப் பேசாதவன் தமிழில் வல்லானோ

தமிழிற வல்லாதவன்.

82. செந்தமிழ்ச் செம்மை

(இசைந்த மெட்டிற் பாடுக)

1

உள்ளக் கருத்தை யெல்லாம் தெள்ளத் தெளிவாய் என்றும் சொல்லற் குரிய தன்றோ மொழியாகும்

தள்ளத் தகுந்த தில்லை கொள்ளச்சொல் எல்லா மென்னும் பிள்ளைத் தனமும் நல்ல வழியாமோ.

2

உண்பது பசிதீர உணவையுட் கொள்ளுவதே ஒழுங்கு வேண்டிய தில்லை என்பாரோ நன்கு பல்லைத் துலக்கி நன்னீரிற் குளித்தபின் நாகரிக மாயிருந் துண்பாரே.