உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

3

இசைத்தமிழ்க் கலம்பகம்

உலகெல்லாம் தனியேஓர் குடையின்கீ ழாண்டாலும் உம்பர் மாதர்என்றும் தொண்டாற்றி வந்தாலும் இலகும்நூல் ஒன்றின்றி இகலாரியம் சாலும்

இந்தியை இந்நாட்டில் இனியும் ஏற்று மேலும்

(தமிழைப்)

90. தாய்மொழிப் பற்றின்றித் தாய்நாட்டுப் பற்றின்மை

'மாற்றறியாத செழும்பசும் பொன்னே' என்ற மெட்டு

பண்

சுருட்டி

1

தாய்மொழிப் பற்றில்லாத் தன்னாட்டுப் பற்றே

தன்னினங் கொல்லவே தான்கொண்ட புற்றே

ஆய்மதப் பற்றில்லா அடியார்பற் றுண்டோ

ஆண்டவன் தளியிடித் தவரைக்காப் பின்றே.

2

தானேயெங் குஞ்செல்லின் தன்னாடும் வருமோ தன்மொழி விட்டுமே தான்சொல்லப் பெறுமோ

பூனைக ளேஉற்ற இடத்தோடும் ஒன்றும்

புல்லிய விலங்குபோல் ஒழுகுதல் நன்றோ.

3

மொழியினா லேமாந்தர் இனமொன்று தோன்றும் இனம்பர வியஇடம் நாடாமெஞ் ஞான்றும் மொழியொன் றில்லாமலே இனமொன்று மில்லை இனமொன்றில் லாமலே நாடென்று மில்லை.

4

நாட்டுப்பற் றொன்றையே நலமென்று சொல்வார் நாயகமா யுள்ள மொழியொன்று கொல்வார்

வேற்றுப் புலத்தவ ரேயிது செய்வார்

வேடர்போ லேஅறி வில்லார்மீ தெய்வார்.

தாளம்

சார்பு