உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

91. எந்நாட் கண்ணி

1

ஆட்பெயர் போல்ஊர்ப் பெயரும் அழகான செந்தமிழில் ஏற்பட்டுத் தமிழகமே இன்புறுவ தெந்நாளோ?

2

சீரங்கம் தன்னைத் திருவரங்க மென்று முன்போல் கூறுங்கள் என்றாள்வார் குறிப்பதுவும் எந்நாளோ?

3

வேதா ரணியமென விளம்புகின்ற பேர்மறைந்தே ஈதே மறைக்காடென் றியம்புவதும் எந்நாளோ?

4

மாயூரந் தன்னை மயிலாடு துறையென்று

வாயாரச் சொல்லி வழங்குவதும் எந்நாளோ?

5

வைத்தீசு வரன்கோயில் வினைதீர்த்தான் கோயிலென்று வைத்தபழம் பெயர்மீண்டும் வழங்குவதும் எந்நாளோ?

6

சிதம்பரம் தன்னைச் சிற்றம்பலம் அல்லது தில்லையென்று கூறித் திளைப்பதுவும் எந்நாளோ?

7

விருந்தா சலந்தன்னை விரும்புபழ மலையென்று கருத்தாகக் கூறிக் களிப்பதுவும் எந்நாளோ?

8

திண்டி வனந்தன்னைத் திகழ்புளியங் கானமென்று பண்டே போலெங்கும் பகர்ந்திடுவ தெந்நாளோ?

9

நீல கிரியை நீலமலை யென்றுமுன்னோர்

போலப் புகன்றுமகிழ் பொங்குவதும் எந்நாளோ?

81