உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

2

பண்டை மொழி வகையில் தண்டமிழினும் வேறு பண்பாடமைந்த மொழி இலையன்றோ

இசைத்தமிழ்க் கலம்பகம்

இன்றைய செய்தியெல்லாம் நன்றா யறிந்துகொள்ள இங்கிலாந்தின் மொழியே இறை கண்டாய்.

3

கீழை மொழிவகையில் சாலமிகுந் தமிழே கிளரும் பலவுண்மைகள் கிளந்தோதும் மேலை மொழிவகைபில் மேலான மொழியாக மிகுதியுந் திகழ்வதாங் கிலமாகும்.

4

குலமுந்து தமிழ்தனி குமரிநாடு பிறந்து குலவிவரும் பெருந்தாய் மொழியாகும் பலவுங் கலந்தநல்ல கலவை மொழியாங்கிலம் பகருமொழி நூலுறுந் துணையாகும்.

5

இங்கிருந் துற்ற கல்வி கொண்டு வாழ்க்கைதனையே ஏந்தி நடத்திவரத் தமிழ்போதும்

எங்குஞ் சென்றேயுலகில் பொன்றுந் துணையுங் கல்வி ஈண்டு மறிவுறஆங் கிலமோதும்.

6

குளிர்ந்த நாடுகளிலே கூடிய வாழ்நாளிலே குலவுமிரு மொழியே பலர்கற்பார்

முளிந்த நாடிதனிலே மூதுவிரை வாழ்விலே முழுதும் வேறான மூன்றுமொழி கற்போ.

7

அறிவுத் துறையில்முந்தி அரசியலைக் கலந்தே அரிதிற் கற்கத் தொடங்கும் சிறுவோரை

வறிதிற் பயிலஇந்தி வலுவிற் கட்டாயந் தண்டும் வலியர்க்குத் தான்அ தொன்றும் தெரியாதே.