உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

101. ஆங்கில இந்தி வேற்றுமை

(இசைந்த மெட்டிற் பாடுக)

1

ஆனையும் பூனையும் ஒன்றாமோ

ஆங்கிலம் போலிந்தி நன்றாமோ

தேனயிர் நீரே என்றாமோ

தீங்குறு நஞ்சும் தின்றாமோ

2

இலக்கண அமைதி இல்லாதே

இலங்கிய நூலுங் கொள்ளாதே

துலக்கிய சொல்லும் ஒல்லாதே துவங்கிய இந்தி கல்லாதே.

3

இந்தியின் மக்கள் பெருந்தொகையேல் ஏனையர் அதனைப் பெறுந்தகையோ இந்தியா சீனம் அறிந்தகையோ

இங்ஙனே பிறகும் வருந்துகையோ.

4

ஆங்கிலர் அயலார் என்றாலும்

ஆண்டனர் நம்மை நன்றாக

ஈங்குள இந்தியர் இன்றோநம்

இன்றமிழ் அழிய நின்றாரே.

102. இந்திய மொழிகள் பதினைந்து

‘கர்த்தர் கட்டாராகில் வீட்டை' என்ற மெட்டு

பண்- (சிந்து பைரவி)

91

தாளம் - முன்னை

இந்தியாவின் சொந்தம் போலும் இன்றுள மொழிகள் பதினைந்தாம். இந்தியாளர் வஞ்சமாக எண்ணிய மொழிகள் பதினான்காம்.