உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இசைத்தமிழ்க் கலம்பகம்

116. தமிழ்ப்பற்றில்லார் தமிழ் பேணுதல் ‘அடுக்கு மல்லிகை தொடுத்த மெத்தையிலே' என்ற மெட்டு

ப.

ஆட்டு மந்தையைக் காக்கும் ஓநாய்போல் - சில்லாள்களே

நாட்டிலே தமிழ்நாட்ட வந்தனர்

முடுக்கு

ஆங்கிலத்தையே அறவகற்றவும்

தாங்கு கட்சியின் தலைமை நிற்கவும்

ப. எடுப்பு

தமிழிற் பற்றுத் ததும்பி வழிதல்போல் - கல்லூரியில் தாய்மொ ழிக்கலை வாயில் விரும்பினார்.

முடுக்கு

ஆங்கிலமொழி நீங்கினவுடன்

ஈங்கும் இந்தியே ஓங்குவதற்கு

ப. எ.

வழியை வகுக்கும் வகையே ஈதென - வடநாடரும் விழியை வைத்து விரைவில் ஏவினர்.

முடுக்கு

மறைமலைவழி முறைதமிழ் பல

துறைபுரப்பவர் நிறைய நிற்கவும்

UI. 6T. ப

கவலை நிறைந்து கலவை நடைத்தமிழ் செந்தமிழென்றே அவலை நினைத்து உரலை இடிக்கின்றார்.

முடுக்கு

தமிழை யிங்ஙனங் கெடுத்த லின்றித்

தமது தொழிலை நடத்தல் நன்று

(ஆட்டு)