உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

தண்டமிழ்ப் பேரையே தாங்கார்

3

தனித்

தமிழறி வோரகம் நோங்கார்

கொண்டதோர் கொள்கையும் நீங்கார்- பழங்

குறடுபோ லும்பேதைப் போங்கார் - (இவர்க்கு)

(இம்மி)

115. ஆங்கிலத்தை யெதிர்ப்பது தமிழ்ப்பற் றாலன்று 'வெள்ளிப் பிடியறுவாள்' என்ற மெட்டு

1

ஆங்கிலத்தை யெதிர்ப்ப தெல்லாம்

ஆரிய இந்தியை ஏற்க

ஆய்ந்து கண்டமுடிபதுவே அன்னைத்

தமிழையுந் தீர்க்க.

2

ஆங்கிலமே இந்திபொது ஆகத்தடை யானமலை நீங்கினதும் அதனிடத்தில் நேரேவரும் இந்தியலை.

3

ஆட்சியுடன் கல்விதமிழ் ஆகவேண்டு

மின்றே யென்பார்

மாட்சிமிகும் அவர் தமிழோ

மாறுவடம் முக்காற் பங்காம்.

4

ஆங்கிலமும் வரலாறும் அருந்தமிழும் கல்லாமாந்தர்

ஓங்கியுள்ள நிலைமை நீட உற்ற

தடை ஒன்றும் வேண்டார்.

ஆங்கிலத்தை எதிர்ப்ப வர்க்கே

5

அந்தமிழிற் பற்றே யில்லை

ஈங்கெவரும் மாறு கொண்டால்

இன்றிலவு காத்த கிள்ளை.

103