உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

பண்

இசைத்தமிழ்க் கலம்பகம்

118. தலைவர் பிணங்கித் தமிழை வெறுத்தல்

(இசைந்த மெட்டிற் பாடுக)

ப.

அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆகா தென்றால் அன்னையும் தம்பிக்கே ஆகாது போமோ.

து. ப.

அன்னையே கண்ணுறும் அன்பெனுந் தெய்வம் அவளருமை சொல்ல எவருக்கும் ஆமோ

2

எண்ணங்கள் வேறுபட் டிருத்தல் இயல்பே இதனாலே கட்சிவிட் டேகுதல் அழகோ

பின்னே யிந்தியேற்றுப் பேரின்பத் தமிழைப்

பேணா திருத்தலே பேரறி விழவோ.

(அண்ண)

(அண்ண)

119. தமிழருக்குத் தக்க தலைவனின்மை

(இசைந்த மெட்டிற் பாடுக)

1

தமிழருக்கே நல்ல தலைவனே இல்லை

தலைவரென் றிருப்போர்க்குத் தமிழப்பண் பில்லை இமிழ்கடல் தாண்டினும் இடந்தமிழ்க் கில்லை இந்திக்கித் தென்னாட்டும் இல்லாத தில்லை.

2

தலைமைத் தமிழ்ப்பேரா சிரியர்க்கிவ் வெல்லை தமிழிற் பற்றே எள்ளத் தனையுமே யில்லை நிலைமையில் தாழ்பள்ளிப் புலவர்க்கோ வல்லை நீங்கும் வேலை தமிழால் என்னுந் தொல்லை

தாளம்