உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

சொல்லி முன்னை யடிமைத்தனம்

சுமந்துவர முன்போ லின்று

2

சோறெனுஞ்சொல் அழகான தூயதமி ழாயிருக்க

( தமிழன்)

மாறியதைச் சாதமென்று மானமின்றி வழங்கி நிற்கும் (தமிழன்)

3

சேயசிவன் திருமாலே செந்தமிழ வழியேனும்

கோயில் வழிபாடு முற்றும்கூற வடமொழி காணும்

4

நாட்டுமொழி இந்தியினி வீட்டுமொழி தமிழெனவே

(தமிழன்)

கேட்டுவழி நின்றுமதி கெட்டுரைத்தான் தமிழனுமே ( தமிழன்)

5

தூயமரக் கறியுணவே துய்க்குமுயர் தமிழன்அன்னே

தீயனெனச் சமையற்பணித் திறமொருசார் இழந்ததென்னே

6

பிள்ளையாரைப் பிடித்ததுன்பம் பின்னரசைப் பிடித்ததைப்போல் வெள்ளைமனத் தமிழன்நிலை விழுத்தமிழைப் பிடித்ததப்பால்

111

(தமிழன்)

(தமிழன்)

7

சீர்த்ததிருச் செந்தமிழில் சிவனுமிட்டான் கையெழுத்தே சாத்துகின்றார் சங்கிருதம் தம்பிரான்மார் தலையெழுத்தே

( தமிழன்)

127. தனித்தமிழ்ப் புலவர்க்குத் தாங்கலின்மை 'பொருளே யில்லார்க்குத் தொல்லையா' என்ற மெட்டு

ப.

தமிழ்நா டெனவொன் றில்லையா

தமிழர் இல்லையா – தனித்

அதில்

தமிழைப்பேணும் புலவர்க்கேஒரு தாங்கல் இல்லையா.