உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இசைத்தமிழ்க் கலம்பகம்

136. தமிழைத் தமிழனே தாழ்த்துதல் உன்னைக் கண்டு மயங்காத' என்ற மெட்டு

ப.

தமிழ்நாடுபோற் கேடுகொள் நாடுமுண்டோ.

உ.1

தன்சொலைத் தாழ்வெனத் தள்ளியே வடசொல் விண்சொலென வியந்து விரும்பியுற.

2

உடைய மதம்தமிழ் உரிமையா யிருக்க வடமொழி தனிலே வழிபடவே.

3

சிற்றடி மைத்தனம் செற்றுரி மையென

முற்றடி மைத்தனம் பெற்றிடவே.

(தமிழ்)

(தமிழ்)

(தமிழ்)

137. தமிழர் பேதைமை

'மார்கழி மாதம் திருவாதிரை நாள்' என்ற மெட்டு

1

வீட்டவர் இளைக்கவும் வேற்றவர் கொழுக்கவே

வேளாண்மை செய்வார்

கோட்டியர் போலத்தம் குடும்பத்தைக் கொன்றிடும் கோளாறே மெய்பார்.

2

நாட்டவர் பசியினால் நைந்தெதிர் நிற்கவும்

நண்ணி வேற்றவரைக்

கூட்டிவந் தவரடி கும்பிட்டு வீழ்ந்துபின்

கொடுப்பார் கேட்டவரை.

3

விருதுநகர் செல்லும் வினையதை என்னது

வீடுவரை யின்றே

வருகவென் றதுபோல வம்பலரை வேந்தர் வரவழைத்தார் பண்டே.