120
6
இசைத்தமிழ்க் கலம்பகம்
கடைக்கழகம் அவன்செயலாற் கலைந்துபோன தாலே கொடைக்காவல் தமிழ்மொழிக்கே குன்றியது மேலே.
7
எழுநிலத்தும் செய்யுள்வகை இயற்றிவந்த தமிழர் எழுநூறாண் டுயர்கல்வி யிழந்துவிட்டார் அமிழ.
8
இனமொழிநா டென்றிவற்றின் வரலாறே யறியார் இங்கவர்நூற் றெண்பதின்மர் இன்னமுந்தற் குறியார்.
9
பகுத்தறிவு தன்மானம் நெஞ்சுரமே யின்றிப் படித்தவரும் படியாதார் என்றிருப்பர் குன்றி.
10
தகுதியில்லாத் தமிழர்இன்று தலைமைபெற நாடி மிகுதியாக ஆரியத்தை மேம்படுத்தார் கூடி.
139. பிராமணிய வுண்மை
பண்
―
(காம்போதி)
ப.
தாளம்
இணை
என்றும் பிராமணரை ஏற்றித் தமிழரேதம்
இனத்தைக் காட்டிக் கொடுக்கும் இழிவே பிராமணியம்
து. ப.
குன்றும் திறமையுள்ளோர் கோடரிக்காம்பா யன்றிக்
கொள்ளமுடியு மோசொல் கோவியல் மாமணியம் (என்றும்)
2.1
கொண்டான்போல் இன்றுங்கூறிக் கொழுத்தபதவி தாங்கிக் குலமொழியைக் கெடுப்பார் பலரேபே ராசிரியர்
கொண்டாடும் ஆள்வினையும் குலத்தில் தம்மையே தாழ்த்திக்
கொண்டார் தந்நலம் மிகக்கொண்டாரே மாசிறியர் (என்றும்)