உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

188. இந்தி தேவையின்மை

பண்

(பியாகு)

ப.

ஏனிந்த நாட்டிற்கிந்தி? - எதிர்முந்தி!

உ.1

மான முடன்தொழில் மருவியே வாழவும்

மதிமிகும் அறிவியல் மாணவே கற்கவும்

ஏனைய நாட்டொடும் இனிதுற வாடவும்

159

தாளம் - முன்னை

இருந்தமிழ் ஆங்கிலம் இருமொழி யிருக்கவும்

(ஏனிந்த)

2

கல்வியே கரையில கற்பவர் நாட்சில

மெல்லவே நினைத்திடின் மிடலறும் பிணிபல தெள்ளிதின் ஆய்ந்துபின் தேறுக கலைமொழி

தள்ளுக அறிவியல் தகுதியில் வறுமொழி

(ஏனிந்த)

189. இந்திக்கும் பெரும்பான்மையின்மை

பண்

(காம்போதி)

தாளம் - முன்னை

ப-

பெரும்பான்மை பெறும் பெற்றியோ

பேராய இந்தி

து. ப. (முடுக்கு)

பெற்றுள ஒற்றுமை அற்றிட உற்றது

(பெரும்)

பிழையும் இலக்கணம் நிலையும் எனக்கொளி

(பெரும்)

பெரிதாங் கிலமொடு சிறிதாந் தமிழெனப்

(பெரும்)

பேசிய நூற்றினில் வாசியும் நாற்பது

(பெரும்)

பேரறி வியலது தீரவும் இலதொரு

(பெரும்)

பிரிவுகள் பலவொடு திரிபுகள் மிகுவது

(பெரும்)

பித்துக் கொளிகளே மெத்தப் பலவட

சொற்பிற் புகுத்திய புத்தப் புதுமொழி

(பெரும்)