உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

3

ஏந்தியே இந்தியைத் தாங்கும் பலர்

ஏதும் அதையறியார் என்றசொல் ஓங்கும் வாழ்ந்திட ஒருபொருள் வேண்டும் எனின்

வாங்க எவர்மனமும் தானாகத் தூண்டும்.

(நாம்)

194. தாய் தன் மகனைக் கடிந்துரைத்தல்

""

"போகாதே போகாதே என் கணவா என்ற மெட்டு போடாதே குடவோலை என்மகனே அந்தப்

பொல்லாத இந்திக்கே என்று சொன்னேன் கூடாத பேரோடு கூடி நீயும் - மிகக்

கூர்கெட்டுப் போனாய்நான் என்ன செய்வேன்.

2

ஆரியத் தாலேநம் செந்தமிழ்க்கே - முன்னே ஆயின கேட்டினுக் களவேயில்லை சீரிய செம்மையால் மீந்திருக்கும் - அந்தச் சிற்றள வும்இந்தி யால்அழியும்.

3

இந்தியால் தந்தமிழ் கெடுவதில்லை - என்று இந்நாட்டைக் காட்டிக் கொடுப்பார் சொல்வார் முந்தியே மறைமலை யடிகள் சொன்ன நல்ல மூதுரை யேதலை மேற்கொள்ளுவாய்.

4

பயனில்சொல் பாராட்டு வானை முன்னே மக்கட் பதரென்று சொன்னாரே வள்ளுவரும் பயனிறைத் தீங்கே தரும் இந்தியை - இன்று பயில்வாரை என்னென்று சொல்லுவதே.

5

நல்ல தமிழ்க்குடி நாம் பிறந்தோம்

நாகரிகங் கண்டார் நம்மவரே

முன்னே

தெள்ளுந் தமிழ்இன்றி இவ்வுலகில் - நாமே

தீண்டா விலங்குக ளாய்விடுவோம்.

163