உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

202. தமிழ்க்காப்புப் படை

'வந்தேன் வரம் பெறவே நானே' என்ற மெட்டு

1

இந்தியை எதிர்த்துவந்தோம் நீண்டும் எத்தியே புகுத்துகின்றார் மீண்டும் செந்தமிழைக் காக்கும்படை வேண்டும் செம்மையுடன் நின்றுபொர யாண்டும்

2

செந்தமிழ்த்தென் நாட்டிற்கிந்தி ஏனோ

சென்றநா ளெதிர்ப்பெலாம் வீண்தானோ இந்தியாளன் எம்மனோர்க்குங் கோனோ இந்த வாழ்வும் இன்பம்நீடு வானோ.

3

ஆரியம் தமிழ்இடை சொற்போரே ஆண்டுகள் மூவாயிரம்என் பாரே

சீரிய தலைபோங் காலம் நேரே

செந்தமிழ்க்கும் வந்ததுதீர்ப் பீரே.

4

நூற்றில் எண்பதின்மர் கல்வி யில்லார் நாட்டின் வரலாறறிய கில்லார் வேற்றுமை யில்லாதவாறே எல்லார்

வீட்டிலும் புகுந்துசொல்க வல்லார்.

5

தமிழ் அரத்தம் ஓடுவார்எல் லாரும்

தண்டிலே முன்னாகவந்து சேரும்

இமிழ்திரைக் கடல்கடந்து நேரும் எங்குமே தமிழ்முழக்கி ஆரும்

171