ஞா. தேவநேயப் பாவாணர்
217. தமிழக மொழியியல் தன்னாட்சி
'நனு பாலிம்ப' என்ற மெட்டு
பண்
―
மோகனம்
ப.
மு(ன்)னமே வேண்டும் மொழியியல் தன்னாட்சி
மூவேந்தர் நாடே.
து. ப.
தனிமொழித் தமிழ்தான் தலைமை பெறாவிடின் தமிழனும் விடுதலை தனையடைந் ததேயிலை
கடல்புகு குமரிக் கண்டமதில் எழுந்த
183
தாளம் - முன்னை
கன்னித் தமிழ்மரபு காத்து வளர்ந்துவர
வடமொழித் தலைமை வள்ளிதாய் நீங்க வம்பமொழி யிந்தி வந்தவழிச் செல
218. தமிழனே தமிழைக் காத்தல்
தினமணி வம்ச' என்ற மெட்டு
பண்
―
அரிகாம்போதி
ப.
தமிழினைப் பேணத் தமிழனே வேண்டும்
தாழ்வற மீண்டும்
து. ப.
அமிழ்தினைக் காத்திட அமைவது பூனையோ
அமருங் கிடைக்காவல் அடவி நரியோ
(முனமே)
(முனமே)
தாளம் - முன்னை
(தமிழினை)
துறைதொறும் ஆரியம் துடைத்தற நீக்கி இறைமையா யிருந்தே ஏனையர் ஏமுற மறைமலை யடிகளின் மலரடி பின்பற்றி நிறைபுல நக்கீரன் நெஞ்சுரங் கொண்டு
(தமிழினை)