உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

185

220. தமிழத் தமிழ்ப் புலவர் மாநாடே இந்திபற்றி முடிவு செய்யத் தக்கது

மயங்குகிறாள் ஒரு மாது' என்ற மெட்டு

ப.

தயங்குவதேன் தமிழ்நாடு - நல்ல

தமிழுக்கும் இந்திக்கும் இடையிலே நீடு

து. ப.

தமிழ்ப் புலவர்மா நாடே

இந்திவந்தால் நன்றோ அன்றோ எனநாடும்

2.1

நீடிய தமிழ்இங்கு நிலையில்லையா நெறியில்லையா பகுத்தறி வில்லையா நாடெலாம் எதிர்ப்புகண் படவில்லையா இந்தி யாலே ஒன்றாய் இன்றே

(தயங்கு)

இந்தி யாவே நன்றாம் என்றால் பொருளுண்டோ (தயங்கு)

2

நெருப்பையே நெய்யினால் அணைப்பதுண்டோ

நீரினால் நெருப்பையும் வளர்ப்பதுண்டோ

பொறுப்பிலாத் தன்னலப் புலிகளேதாம்

இந்தி யாலே ஒன்றாய் இன்றே

இந்தியாவே நன்றாம் என்றால் பொருளுண்டோ (தயங்கு)

221. தனித்தமிழ் கற்றல்

'மணற் பாறை மாடு கட்டி' என்ற மெட்டு

மறைமலையார் அடிகள்வழி

மறத்தமிழப் புலவரிடம்

1

முறையாகப் பாடங்கேட்டுச் செல்லமுத்து

நீ

முயன்றுபயில் தனித்தமிழைச் செல்லமுத்து.