உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

3

திங்கட்குலத் தமிழைத் திங்கள்போல விளக்கும் திங்களிதழும் இன்று 'தென்மொழி'யே தங்கட் கியன்றவரை திங்கட்கா சளிக்கவே தங்கக் கட்டிலணையத் தென்மொழியே

இசைத்தமிழ்க் கலம்பகம்

(தென்)

234. ஆசிரியனே கல்வியமைச்சனாதற்குரியன் ‘பழனிமாமலையில் வாழும்' என்ற மெட்டு

1

ஆசிரியனே கல்வி அமைச்சனும் ஆவான் மாசறு கல்விமுறை மற்றையர் மேவார்.

2

செல்வமுங் கல்வியுமோ செறிந்தென்றும் நில்லா சேரும் வாரியங்களும் செவ்வையாய்க் கொள்ளா.

3

இருண்டநா டுகளில்தான் இரண்டுமே சேரும் தெருண்ட நாடுகள்வேறு தேரவே நேரும்.

4

ஆசிரியனுக் குண்டோ அமைந்ததோர் வாழ்வே மாசிறிய னாகவே மதிப்பவர் ஆள்வார்.

5

ஆங்கிலமுந் தமிழும் அமையும்இந் நாடு தீங்கென வரும்இந்தி தீர்ந்திட நாடு.

6

ஆங்கிலம் நீங்கிவிடின் அறியாமை ஈண்டும் ஆதலால் இருமொழி வாயிலும் வேண்டும்.