உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

235. இந்திய வரலாற்றைத் தெற்கினின்று

தொடங்குதல்

கனகசபாபதி தரிசனம் ஒருநாள்' என்ற மெட்டு வகை

ப.

இந்திய வரலாற்றை இனிமேல் தெற்கில் தொடங்க

என்றனன் சுந்தரமே.

து. ப.

பிந்திய சீநிவாசன் பிறங்கிராமச்சந்திரன்

பெருமித மாயதனைப் பேணிவரைந் தனரே

(இந்திய)

9.1

இந்நாளிற் சிலவரே இந்தியவியல் நூலார்

முன்னேவைத் தாரியத்தைக்

(இந்திய)

கண்ணார் நிலவொளியைக் கதிரோன் இரந்தானென்னத் தென்னோரைப் பழித்தனர் தெரிகநன் றேயித்தை

2

தென்பாலி முகத்தமிழ்த் தேமெல்லொலி கிரேக்கத்

திரிபென்று கூறுவரே

வன்பாய் முதிர்ந்து மாங்காய் வடியாக மாறலுண்டோ முன்பாலைப் பின்பால் வைத்த முட்டாளர் தேறிவரே

3

இந்திய நாகரிகம் இசைந்த பண்பாட்டுடனே

(இந்திய)

முந்திய தமிழரதே

இந்த நிலையில்அதைப் பிந்து மாரியமெனல் தந்தையை மகனெனும் தன்மையில் முடிவதே

(இந்திய)

4

தமிழை மறைப்பதினால்தானே விளையுந் தீங்கு

தமிழொடு போவதில்லை

இமிழ்கடல் நூலும்வாறும் இன்மொழி மாந்தனூலும்

அமிழ்ந்தே பெரிதுங்கெடும் அறிஞரும் காணாவெல்லை

(இந்திய)

197