உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இசைத்தமிழ்க் கலம்பகம்

258. எண்கோள் கூடல்

குரும்பைநிகர் மென்முலையாள்' என்ற மெட்டு

பண் - காம்போதி

1

தாளம்

முன்னை

பலதிசையும் பெரும்பான் மக்கள் பஞ்சையரா யிறத்தல் கண்டும் அலகறும்பொற் செலவிற் செய்யும் அணுக்குண்டுப் பயிற்சி நாளில் இலகுறுகோள் எட்டுஞ் சேர எய்திநின்ற குறிப்பை நோக்கின் உலகமெல்லாம் ஓரரசாய் ஒன்றுகவே என்ப போலும்.

2

விண்ணிடத்தின் அன்றமையும் விரிநீரும் நஞ்சமாகப் பண்ணுமழி படைப்பயிற்சி பலர்தடுத்துந் தொடரு நாளில் எண்ணுறுகோள் இறும்பூதாக எய்திநின்ற குறிப்பை நோக்கின் மண்ணகமே ஓரரசாய் மன்னுகவே என்ப போலும்.

3

போரெனவே யிருவன்னாடு போட்டியிட்டுப் பின்பின்னேவ ஏரவுயர் பெருங்கலங்கள் இயங்குகின்ற பரவெளியில்

சீ ருடைய கோள்களெட்டும் செறிந்துநின்ற குறிப்பை நோக்கின் பாரனைத்தும் ஓரரசாய்ப் பண்படுக என்பபோலும்.

4

ஈனுலகில் எறும்புதேனீ இன்னலமாய் மன்னிவாழ

மானமிகச் செருக்குமாந்தர் மாளமுரண் மூளுநாளில்

வானகமெண் கோள்கள்சேர வந்துநின்ற குறிப்பை நோக்கின் மாநிலமே ஓரரசாய் மருவுகவே என்ப போலும்.

5

பெருவெள்ளமும் கடுங்குளிரும் பிதிர்மலையும் நிலநடுக்கும் உருமிகவிந் நிலமீதெங்கும் உண்டாக வியன்மா வானில் ஒருகுலம்போல் இருநால்கோளும் ஒருங்குநின்ற குறிப்பை

இருநிலமே ஓரரசாய் இணைந்திடுக என்ப போலும்.

நோக்கின்